• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-25 09:33:08    
பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கான பிரேசில் தூதரின் வியப்பு 2

cri
சீனாவிலுள்ள பிரேசில் தூதராக பதவி ஏற்ற காலத்தில், சீனாவின் வெளிநாட்டு திறப்பு அளவு, மென்மேலும் பெரியது. சீனா மீதான பல்வேறு நாட்டு மக்களின் புரிந்துணர்வு படிப்படியாக ஆழமாகி வருகிறது. பெய்ஜிங் ஒலிம்பிக்கின் மூலம், இப்போக்கு தொடர்ந்து வளர்ச்சியடைந்து, மேலும் அதிகமானோர்

உண்மையான சீனாவை அறிந்துகொள்ள வேண்டுமென, அவர் விருப்பம் தெரிவித்தார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் நெருங்கி வரும் வேளையில், ஒலிம்பிக் சூழல் மென்மேலும் கோலாகலமாக மாறி வருகிறது. சீனாவில் மட்டுமல்ல, பிரேசிலின் உள்ளூர் செய்தி ஊடகங்களும் பெய்ஜிங் ஒலிம்பிக் பற்றிய ஏராளமான செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளன. தவிர, பல்வேறு துறைகளில், சீனாவின் நிலைமையை அவை அறிமுகப்படுத்தி வருகின்றன. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், மேலும் அதிகமான தங்கப் பதக்கங்களைப் பெற, பிரேசில் விளையாட்டு வீரர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

வாலிபால், கடற்கரை வாலிபால், ஜிம்னாஸ்டிக்ஸ், பாய்மரப் படகுப் போட்டி, ஜூடோ முதலிய போட்டிகளில், பிரேசில் தங்கப் பதக்கத்தைப் பெறும் திறன் கொண்டது.
குறிப்பாக, பிரேசிலின் கால்பந்து அணியின் பெயர் பட்டியலில், காகா, ரோனால்தினியோ, ராபினியோ உள்ளிட்ட புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் இடம்பெறுகின்றனர்.
முன்பை விட, தற்போதைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மாபெரும் அரங்கமாக மாறியுள்ளது. நடப்பு ஒலிம்பிக்கின் துவக்க விழா, உலகில் ஆழப்பதிவது உறுதி என்று தூதர் நெவேஸ் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ஒரு புறம், சீன மக்கள் பெரிய ரக நிகழ்ச்சியை நடத்தும் ஆற்றலை, வேறு நாடுகள் மிஞ்ச முடியாது என்று நம்புகின்றோம். இதனால், தலைசிறந்த அரங்கேற்றத்தைக் கண்டுரசிப்பதை எதிர்ப்பார்க்கின்றோம். மறு புறம், சீனா, 5000 ஆண்டுகால பண்பாட்டைக் கொண்ட பண்டைய நாடாகும். அதன் நாகரிகத்தில் பலர் ஆர்வம் கொள்கின்றனர்.

சீனாவின் ஒருங்கிணைப்பாளர்கள், 5000 ஆண்டு நாகரிகத்தையும், ஒலிம்பிக் எழுச்சியையும் ஒன்றிணைப்பார்கள். துவக்க விழா, நடப்பு ஒலிம்பிக்கின் தனிச்சிறப்பியல்பாக மாறும் என்றார் அவர்.
பேட்டியின் கடைசியில், தூதர் நெவேஸ், சீன மொழியில், பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கான நல்வாழ்த்துக்களையும் எதிர்ப்பார்ப்பையும் தெரிவித்தார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் மூலம், சீனா மேலும் திறந்து வைக்கப்படும்,. அதே வேளை, சீனாவின் மீது, உலகம் மேலும் திறப்பு மனப்பான்மையை கொள்ள வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.