• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-25 18:07:34    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான வாழ்த்துக்கள்

cri

பெய்சிங் நேரப்பபடி 24ம் நாள் இரவு சீனாவின் பெய்சிங்கிலுள்ள பறவைக் கூடு என்று அழைக்கப்படும் தேசிய விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் பண் மீண்டும் இசைக்கப்பட்டது. 16 நாட்கள் நீடித்த 29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இனிதே நிறைவடைந்தது.

இந்த நிறைவு விழாவில், பெய்சிங் ஒலிம்பிக் போட்டி குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Jacques Rogge கூறியதாவது

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அமைப்புக் குழுவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இது, உண்மையில் மிகவும் தலைசிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும் என்று அவர் வெகுவாக பாராட்டினார்.

கடந்த 16 நாட்களில், பெய்சிங் உலகிற்கு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பிரம்மாண்டத்தை வெளிக்காட்டியதோடு, உலகம் பெய்சிங்கின் மகத்துவத்தையும் புரிந்துக் கொண்டுள்ளது. இது குறித்து, நாங்கள் இணைந்து ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம் என்று அவர் கூறினார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் அமைப்புக் குழுவின் தலைவர் லியு ச்சி நிறைவு விழாவில் கூறியதாவது

கடந்த 16 நாட்களில், உலகின் 204 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் ஒலிம்பிக் எழுச்சியை வெளிக்கொணர்ந்து, நியாயமானப் போட்டிச் சூழலில் முழுமூச்சுடன் போட்டியிட்டு, உயர் நிலை மற்றும் தலை சிறந்த போட்டியாற்றவை வெளிக்காட்டியுள்ளனர். அதே வேளையில், மொத்தம் 38 உலக சாதனை பதிவுகளும், 85 ஒலிம்பிக் சாதனை பதிவுகளும் ஏற்படுத்தப்பட்டன என்று லியு ச்சி தெரிவித்தார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், ஒலிம்பிக் பதக்கங்களைப் பெறும் கனவை, பல நாடுகள் நனவாக்கியுள்ளன. ஓடும் நீரில் ஒற்றையர் உள்ள ஓட்டத்தில் டோதோ குடியரசின் விளையாட்டு வீரர் Benjamin Boukpeti  வெண்கலப் பதக்கம் பெற்றார். அது, டோதோ பெற்ற முதல் ஒலிம்பிக் பதக்கமாகும். ஜுடோ போட்டியில், மங்கோலியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் தமது நாட்டு வரலாற்றில் முதலாவது தங்கப் பதக்கம் பெற்றார். பத்தாயிரத்துக்கு அதிகமான விளையாட்டு வீரர்களில் 302 தங்கம் மற்றும் இதர பதக்கங்களை, விளையாட்டு வீரர்களில் சிறுபகுதியினர் மட்டுமே பெற முடியும். ஆனால், அவர்கள் தங்களது செயல்பாடுகளின் மூலம், பங்கெடுப்பு என்பது வெற்றி பெறுவதை விட மிக முக்கியமானது என்ற ஒலிம்பிக்கின் மற்றொரு கருத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

கடந்த 16 நாட்களில், ஓர் உலகம் ஒரு கனவு என்ற தலைப்பு முழக்கம், பெய்சிங்கில் ஒலி்ம்பிக் போட்டியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம், தனிச்சிறப்பு மற்றும் உயர் நிலை பெய்சிங் ஒலிம்பிக் போட்டியின் பொது குறிக்கோள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. பெய்சிங் ஒலிம்பிக் போட்டியை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இயக்குநர் Gilbert Felli உயர்வாக பாராட்டினார். விளையாட்டுப் போட்டி தடையின்றி நடைபெற்றது. விளையாட்டு அரங்குகள் மிகவும் அழகாக உள்ளன. அவற்றில், போட்டியின் அமைப்புப் பணிகள் தடையின்றி மேற்கொள்ளப்பட்டன. இது வரை, அனைத்து பணிகளும் மிகவும் மனநிறைவு தருவதாகவுள்ளன என்று Gilbert Felli கூறினார்.

பரந்தத்தன்மையும் மக்களின் பங்கெடுப்பும், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மிகப் பெரிய தனிச்சிறப்புகளாகும். இப்போட்டியின் மூலம், 130கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவில் ஒலிம்பிக், அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக், மானுட மைய ஒலிம்பிக் என்ற ஒலிம்பிக் எழுச்சி பெரிதும் முன்னேற்றப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கிற்கான சீனாவின் பங்கு குறித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பண்பாடு மற்றும் ஒலிம்பிக் கல்விக் குழுவின் தலைவரும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முன்னாள் துணைத் தலைவருமான ஹெ சென்லியாங் இவ்வாறு கூறினார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மிக ஆழமான முக்கியத்துவம் வாய்ந்தது என்று Jacques Rogge கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது

பெய்சிங் ஒலிம்பிக் போட்டியின் மூலம், உலகம் மேலும் அதிகமாக சீனாவை புரிந்து கொண்டதோடு, சீனாவும் மேலும் அதிகமாக உலகத்தை அறிந்துக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்

நீயும் நானும் ஒரே உலகைச் சேர்ந்தவர்கள். நாம் குடும்ப உறவுகள் என்ற அழகான பெய்சிங் ஒலிம்பி்க பண்ணின் இசையுடன், ஒலிம்பிக் தீபம் படிப்படியாக அணைந்தது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தனது கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றியது. 30வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் நகரமான இலண்டன், ஒலிம்பிக் கொடியை பெய்சிங்கிடமிருந்து பெற்றது. ஏதென்ஸிலிருந்து பெய்சிங்கிற்கு, பெய்சிங்கிலிருந்து இலண்டனுக்கு, ஒலிம்பிக் போட்டியும் ஒலிம்பிக் எழுச்சியும் தொடர்ந்து என்றுமே வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.