• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-26 13:39:53    
தொழுகைக் கோயில் (ஆ)

cri

பாடல் மண்டபம், தொழுகைக் கோயிலின் முன்புறத்தில் இருக்கிறது. தொழுகை செய்யும் முன், அதில் ஏறி, தொழுகை நேரத்தை அறிவிக்கின்றனர். அதனால், அது அறிவிப்பு மண்டபமாகவும் அழைக்கப்படுகிறது. முன்பு, அது, சோங் வம்சகாலத்தில் கட்டியமைக்கப்பட்ட திருமறை மதிப்பு மண்டபமாகும்.

மேடையின் இரு பக்கங்களில், நினைவுத் தூபி விதான மண்டபங்கள் காணப்படலாம். 1496ம் ஆண்டு, தொழுகைக் கோயிலைப் புனரமைக்கும் போது, இந்த நினைவுத் தூபிகள் கட்டியமைக்கப்பட்டன. அவை, அரபு மற்றும் சீன மொழி எழுத்துக்களால் இயற்றிச் செதுக்கப்பட்டவை.

இக்கோயிலில், வேறு சில தொல்பொருட்கள் இருக்கின்றன. ஒன்று, இரும்புத் தூபக்கலசம். அதன் உயரம், 2.7 மீட்டராகும். அதில், அரபு எழுத்துக்கள் மற்றும் da qing jia qing san nian qiu yue ji ri jian zao என்ற சீன எழுத்துக்கள் காணப்படலாம்.

இரண்டு, வெண்கலத் தூபக்கலசம் ஆகும். அதன் எடை, 900 கிலோகிராமை தாண்டும். அதில் சீன எழுத்துக்களும் செதுக்கப்பட்டன.

தவிர, 1039ம் ஆண்டில் அமைக்கப்பட்ட வெண்கல பாத்திரமும், மிங் வம்சக்காலத்தில் கோயிலைப் புனரமைக்கும் போக்கைப் பதிவாக்கிய கல் நினைவுத் தூபியும், அங்குள்ள தொல்பொருட்களாகும்.

இக்கோயிலின் கட்டிடங்கள், சீனாவின் பாரம்பரிய மரக் கட்டமைப்பு நடையில் அமைந்திருக்கின்றன. ஆனால், முக்கிய கட்டிடங்களின் நுணுக்கமான அலங்காரத்தில், இஸ்லாமியக் கட்டிடத்தின் அரபு அலங்கார நடை பயன்படுத்தப்பட்டது.

அது, சீனாவின் இஸ்லாமியப் பண்பாட்டின் களஞ்சியங்களில் ஒன்றாகும். அங்கு, யுவான் வம்சக்காலத்தில் அரபு நாடுகளிலிருந்து சீனாவுக்கு வந்து முஸ்லிம் மதத்தை பரப்பிய இஸ்லாமிய மத பெரியோர் இருவருக்கான கல்லறைகள் உள்ளன. கல்லறைகளின் நினைவுத் தூபிகளில் அரபு எழுத்துக்கள் செதுக்கப்பட்டன. அவையும் சீனாவின் அரிய தொல்பொருளாகும்.