• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-26 10:05:30    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நல்லபடியே நடந்துகொண்டிருக்கிறது. விளையாட்டு அரங்குகளிலும், திடல்களிலும் விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும், நாடு, மொழி, இனம் என்ற பாகுபாடின்றி சம வாய்ப்புடன் போட்டியிட்டுக்கொண்டிருக்கின்றனர்.
க்ளீட்டஸ்: வீரர்களது ஆர்வமும், ஆற்றலும் பார்க்கும் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மக்களின் கரவொலியும், முழக்கங்களும் வீரர்களுக்கு உற்சாகமூட்டி வருகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது பரவச அனுபவம் கிடைப்பதை நாம் யாருமே மறுக்க முடியாது.
கலை: எமது பணிக்கு ஆதரவும், உற்சாகமுமூட்டி வரும் அன்பு நேயர்களே, ஒலிம்பிக் எழுச்சியோடு உங்களுக்கு நன்றி கூறி இன்றைய நிகழ்ச்சிக்கு செல்கிறோம். முதலில் தொலை பேசி மூலம் தெரிவித்த நேயர்களின் கவிதை மற்றும் வாழ்த்துரை கேளுங்கள்.
......விழுப்புரம் என் குபிநாதன் 29வது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக படைத்த கவிதையை கேட்டு ரசியுங்கள்.
...........அடுத்து ஈரோடு காளியப்பம் பாளையம் க.ராகம் பழனியப்பன் தெரிவித்த வாழ்த்துரை கேளுங்கள்.

மின்னஞ்சல் பகுதி
யாழ்பாணம் பாலா ஈசன்
சீனா தங்கப் பதக்கப்பட்டியலில் முன்னிலையில் இருக்கின்றனர். சீன வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் எனது பாராட்டுக்கள். சீனாவில் நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டியில், தொடர்ந்தும் சீனா முன்னிலை வகிக்க, எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
ஆகஸ்டு திங்கள் 12 ஆம் நாள் இடம்பெற்ற •நேர்மையான ஒலிம்பிக்• என்ற கட்டுரையைக் கேட்டேன். குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி முன்னேற்றம் பெறவிரும்பும் போக்கு, தற்காலத்தில் பரவி வருகிறது. இதனால், விளையாட்டுத் துறையும் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகின் சில முக்கிய விளையாட்டு நட்சத்திரங்கள், ஊக்க மருந்து சோதனையில் சிக்கி அவமானப்பட்டதை நாம் கண்டிருக்கின்றோம். ஊக்க மருந்தின் மூலம் பெறப்படும் வெற்றியைத் தடுப்பதுடன், ஊக்கமருந்தின் பயன்பாட்டினால் விளையாட்டு வீரர்களின் உடல்நலன் கெடுவதை தடுப்பதும் ஒரு சிறந்த வழிமுறையாகும். எனவே, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஊக்க மருந்து சோதனைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதை நான் பெரிதும் வரவேற்கின்றேன்.

இலங்கை M.S.M. இர்ஷாத்
சீனத் தலைநகர் பெய்சிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவை கண்டுகளித்தேன். துவக்க விழா கலைநிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக இருந்தன. தொடர்ந்து போட்டிகளில் சீன வீரர்கள் பதக்கங்களை பெற்று முன்னிலை வகித்து வருகின்றனர். அனைத்து போட்டிகளிலும் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி
பெய்ஜிங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 29-வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி பற்றி தமிழ்ப்பிரிவு வழங்கும் சிறப்புச் செய்திகளை தொடர்ந்து கேட்டு வருகின்றேன் சீன ஒலிம்பிக் அணி தொடர்ந்து தங்கப் பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்று வருவதை அறிந்து நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். சீனா, பொருளாதார வளர்ச்சியில் மட்டுமின்றி விளையாட்டுத்துறையிலும் உலகில் எந்த நாடும் அசைக்க முடியாத சாம்பியன் என்பதை இந்த தங்க வேட்டை உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டியிருக்கின்றது என்றால் மிகையாகது பாராட்டுக்கள்.
ஊட்டி, S.K.சுரேந்திரன்

செய்தியில் நாள்தோறும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெரும் வீரர்களைப் பற்றியும் அவர்கள் எந்த போட்டிகளில் பரிசுகள் பெற்றார்கள் என்பதை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது தொலைக்காட்சியை விடவும்,செய்தித் தாள்களை விடவும் சீன வானொலியில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளைப் பற்றி நாள்தோறும் கேட்பதையே நான் விரும்புகிறேன். மேலும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் சீனா அதிக பதக்கங்களைப் பெற்றுவருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சீனாவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி பல அறிய சாதனைகள் படைத்து வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதில் அய்யம் இல்லை.
வளவனூர், முத்துசிவக்குமரன்
பெய்ஜிங் ஒலிம்பிக் ஆகஸ்ட் மாதம் 8ஆம் நாளன்று கோலாகலத்துடன் துவங்கி, வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தன்னார்வத் தொண்டர்களின் கடுமையான உழைப்பாலும், சீன அரசின் தகுந்த முன்னேற்பாடுகளாலும் இந்த உலக விளையாட்டு விழா உற்சாகத்துடன் நடைபெறுகிறது. இதில் சீனா அதிக தங்கங்கள் பெற்று முன்னிலை வகிப்பது, சீன மக்களை பெருமைப்பட வைப்பதாகும். இந்த முன்னிலையை சீன வீரர்கள் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம். 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, இதுவரை ஒரு தங்கப்பதக்கம் தான் பெற்றிருக்கிறது என்பது ஏமாற்றமாக இருந்தாலும், இந்த பதக்கம் பெற்று 28 வருடங்கள் ஆகி விட்டது என்பது, ஒரு வகை ஆறுதலை அளிக்கிறது.

30 பள்ளிப்பட்டி இரா. சுப்ரமணி......
சீன‌ அர‌சு விளையாட்டு அர‌ங்குகளுக்கருகில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு இடையூறுக‌ள் ஏற்ப‌டாத‌வாறு சிற‌ப்புட‌ன் ந‌ட‌த்தி காட்ட‌ பெரும் முய‌ற்சி எடுத்துள்ள‌து. பொது மக்கள் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைவரின் பார்வை இப்போது பெய்ஜிங் மீதுதான் , அறிவியல் தொழில் நுட்பம் வாய்ந்த உயர்தர ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் சீனாவின் கடுமையான முயற்சிக்கு ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு சிறப்பான இடம் கிடைக்கும், அதேவேளை தூய்மைக்கேடற்ற ஒலிம்பிக் நடத்திய சிறப்பும் சீனாவுக்கே கிடைக்கும்.
திருப்பூர் இரா.சின்ன‌ப்ப‌ன்
பெய்சிங்கில் நடைபெறும் 29வது கோடைக்கால ஒலிம்பிக்கில் மொத்தம் 2173 போட்டிகளில் 302 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளதை அறிந்து மகிழ்கிறேன்.
சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சியில் ' புதியதாகக் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்திருக்கும் "சுரங்க இருப்புப்பாதை" பற்றி கேட்டேன். இதன் வழியே செல்ல விரும்புவோர் முதலில் அங்குள்ள தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும், அந்த சீட்டை வைத்தே உள்ளே நுழையவும் பயண முடித்து வெளியே வரவும் முடியும் எனவும் அறிந்து வியப்படைந்தேன்.