இன்று, ஆகஸ்ட் 26ம் நாள். ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு முந்தைய 10 வது நாள் ஆகும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது பற்றிய அனுபவங்களை உணர்வுப்பூர்வமாக பயன்படுத்தி, ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பல்வேறு ஆயத்தப் பணிகள் நன்றாக மேற்கொள்ளப்பட்டு, இரண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளும் மிகச்சிறந்தவையாக அமைய வேண்டும். இன்று பெய்சிங்கில் நடைபெற்ற ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பணி பற்றிய அணி திரட்டல் கூட்டத்தில் பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவர் லியு ச்சி இவ்வாறு தெரிவித்தார்.
செப்டம்பர் 6ம் நாள், பெய்சிங் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டி துவங்கவுள்ளது. அப்போது, சுமார் 150 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 4000க்கு மேலான ஊனமுற்ற விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் இதில் கலந்து கொள்வர். அதிகாரப்பூர்வ உடன்படிக்கையின் வடிவத்தில், ஒரே ஒலிம்பிக் அமைப்புக் குழுவால் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியும் கூட்டாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.
உண்மையில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப்பணி ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டதோடு, ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணியும் மறுபுறத்தில் விரைவாகவும் ஒழுங்காகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, தொடர்புடைய ஆயத்தப் பணி இறுதி கட்டத்தில் நுழைந்துள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதை இயக்கு ஆற்றலாக கொண்டு, முழுமூச்சுடன், ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் செவ்வனே செய்யப்படும் என்று லியு ச்சி இக்கூட்டத்தில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
இறுதி 11 நாட்களில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நிறைவடைந்தது முதல் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டி துவங்குவது வரையான காலத்திலான பல்வகைப் பணிகளை பயன்தரும் முறையில் செவ்வனே செய்ய வேண்டும். திடல்கள், அரங்குகள், விளையாட்டு வசதிகள், தொழில் நுட்ப அமைப்பு முறை, தற்காலிக வசதிகள் ஆகியவற்றுக்கான ஆயத்தப் பணிகளை முக்கியமாக கொண்டு, சிறப்புச் சேவையுடன் தொடர்பான ஆயத்தப் பணியை நடைமுறைப்படுத்தி, தொடர்புடைய தடையற்ற வசதிகளை அதிகரிக்க வேண்டும். தவிர, ஊனமுற்றோர் ஒலிம்பிக தீபத் தொடரோட்டம், இதன் துவக்க மற்றும் நிறைவு விழாக்கள் ஆகியவற்றை நல்லபடி ஏற்பாடு செய்து, உயர் நிலையிலான உபசரிப்புப் பணியை வழங்கி, தொடர்புடைய சேவையை சிறப்புடன் செய்ய வேண்டும் என்றார் அவர்.
ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, 26 திடல்களும் அரங்குகளும் பயன்படுத்தப்படும். இதிலமைந்த பல ஊன்முற்றோருக்கான சிறப்பு வசதிகளின் கட்டுமானப் பணி அடுத்த சில நாட்களில் நிறைவேறும். அப்போது, இந்தத் திடல்களிலும் அரங்குகளிலும் ஊனமுற்றோருக்கு தோதாக அமையும் பல பாதைகளும் வசதிகளும் தயாராக இருக்கும்.
உலகில் சுமார் 60 கோடி ஊனமுற்றோர் இருக்கின்றனர். ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகம் எங்கும் வாழும் ஊனமுற்றோரின் முக்கிய விழாவாகும். அத்துடன், ஊனமுற்றோர் தமது உள்ளார்ந்த திறனை வெளிக்கொணர்த்து, சுய வலிமைக்காக விடா முயற்சி செய்வதென்ற எழுச்சியை வெளிப்படுத்தும் அரங்கும்ம் ஆகும். பெய்சிங் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகள் மற்றும் பிரதேசங்களின் எண்ணிக்கை, வரலாற்றில மிக அதிகமாகும். விளையாட்டு வீரர்களுக்கு சேவை வழங்கும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமத்துக்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் முழுமுச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 28ம் நாள் பிற்பகல் 2 மணிக்கு ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமம் சோதனை முறையில் இயங்கத் துவங்கும் என்று பெய்சிங் ஒலிம்பிக் கிராமத்தின் துணைத் தலைவர் Cheng Changhong தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தற்போது, ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமத்துக்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மானிட வள கவனிப்பிலும் சேவையின் நடைமுறையாக்க நுணுக்கங்களிலும் மேலும் முக்கியத்துவம் அளிப்பது பற்றிய வழிகாட்டல் கோட்பாட்டுக்கு இணங்க, 26 மணி நேரத்துக்குள், தடையற்ற வசதிகள், சிறப்பு வசதிகள், தொடர்புடைய சின்னங்கள் ஆகியவற்றை உருவாக்குவதை பணிக்குழு நிறைவேற்றும் என்றார் அவர்.
ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டியின் போது, விளையாட்டு வீரர்களும் பார்வையாளர்களும் தங்கு தடையின்றி ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளை அடைவதற்கு உத்தரவாதம் செய்யும் வகையில், 16 சிறப்பு பேருந்து போக்குவரத்து நெறிகள் திறந்து வைக்கப்பட்டு, 400 சிறப்புப் பேருந்துகள் பயன்படுத்தப்படும். ஊனமுற்றோருக்கான சிறப்பு வாடகைச் சிற்றுந்து அணி உருவாக்கப்பட்டுள்ளது. பெருஞ்சுவர், அரண்மனை அருங்காட்சியகம் முதலிய காட்சி இடங்களில் அவர்களுக்கான சிறப்பு வசதிகளும் பாதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்புடைய மருத்துவமனைகளிலும் ஹோட்டல்களிலும் ஊனமுற்றோருக்கு உதவும் சிறப்பு வசதிகளும் பாதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. தவிரவும், ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, 6000 சிறப்புப் பணியாளர்களும் 30ஆயிரத்துக்கு அதிகமான தன்னார்வத் தொண்டர்களும் இதற்கு சேவைவழங்குவர்.
|