• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-27 12:26:59    
தனிச்சிறப்பு மிக்க திருமண விழா

cri
திருமணம், மக்களின் வாழ்வில் முக்கியமான ஒரு அம்சமாகும். வெகு காலத்துக்கு முன்பிருந்தே, சீனர்கள் அனைவரும் தங்களது திருமண விழா கோலாகலமாக நடைபெற்று, மறக்க முடியாத அருமையான நினைவுகளை உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அண்மையில், வட சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் பாவ் தோவ் நகரில், புதிதாக திருமணம் செய்த தம்பதிகள் சிலர் தனிச்சிறப்பு மிக்க திருமண விழாக்களை நடத்தினர். இந்தத் திருமண விழாக்கள் வேறுபட்டதாக அமைந்திருந்த போதிலும், எளிமையாகவும் நாகரீகமான முறையிலும் நடத்தப்பட்டன.

ஜுன் 21ஆம் நாள் முற்பகல், பாவ் தோவ் நகரில் காங் தியெ வீதி, ஹுவாங் ஹே வீதி முதலிய வீதிகளில் நடந்த நகரவாசிகள், மிதி வண்டி மூலம் மணமகளை வரவேற்கும் காட்சியை நேரில் கண்டனர். சுமார் 100 மிதி வண்டிகள் கொண்ட வரவேற்பு அணியில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரட்டையர் மிதி வண்டி முன்னணியில் இருந்தது. பார்ப்பதற்கு நல்ல அழகான மணமகன் மற்றும் திருமண ஆடை அணிந்த மணமகள் இம்மிதி வண்டியில் சவாரி செய்தனர். பாவ் தோவ் நகரில் முதன்முறை நடைபெற்ற மிதி வண்டி திருமண விழா, நகரவாசிகளின் ஆர்வம் மற்றும் பொறாமை கொண்ட பார்வையை கவர்ந்தது. இத்திருமண விழாவின் நாயகன் நாயகியாக, மணமகன் சாங் சென் மற்றும் மணமகள் சுன் ச்சி சின் உணர்ச்சி வசப்பட்டனர். அவர்கள் கூறியதாவது—

"மகிழ்ச்சி அடைகின்றோம். வெளிப்புற விளையாட்டு போன்ற வழிமுறையை விரும்புகின்றோம். எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் வாழ வேண்டும் என விரும்புகின்றோம்."

"இந்தத் திருமண விழா மிகவும் சிறப்பாக அமைந்தது. எங்கள் மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது மிகவும் முக்கியமானது" என்றார்கள் அவர்கள்.

ஆடம்பர திருமண கார்களும் மணமகளுக்கான வரவேற்பு கார் அணியும் இல்லை என்ற போதிலும், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மாசுபாடற்ற மிதி வண்டி திருமண விழா மக்களின் நினைவில் ஆழப்பதியும்.

கடந்த நூற்றாண்டின் இறுதி முதல், விதவிதமான தனிச்சிறப்பு மிக்க திருமண விழா, சீன இளைஞர்கள் விரும்பி நாடும் புதிய நாகரீகமாக மாறியுள்ளது. சுற்றுப்பயண திருமண விழா, மணற்திடலில் திருமண விழா, நீருக்கு அடியில் திருமண விழா, மிதி வண்டி திருமண விழா, காலில் சக்கரம் கட்டியட்டி திருமண விழா உள்ளிட்ட நவீன திருமண வடிவங்கள் அடுத்தடுத்து தோன்றியுள்ளன. அத்துடன், சீனாவின் பாரம்பரிய தனித்தன்மை வாய்ந்த திருமண விழா, இளைஞர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. பாவ் தோவ் நகரில் பாரம்பரிய திருமண பழக்கவழக்கங்களின் தனிச்சிறப்பு என்ன? இந்நகரைச் சேர்ந்த பழக்கவழக்க நிபுணர் லியூ லூ கூறியதாவது—

"பாரம்பரிய திருமண வழக்கங்களில், 8 பேர் தூக்கும் பல்லக்கு இடம்பெறுகிறது. இப்பல்லக்குகள் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் உள்ளன. மணமகள் சிவப்பு பல்லக்கிலும் மணமகன் நீல நிற பல்லக்கிலும் அமர்ந்து கொள்கின்றனர். மேளம் உள்ளிட்ட இசைக் கருவிகள் இசைக்கப்படுகின்றன. பல்லக்கிலிருந்து இறங்கிய மணமகள் சிவப்பு கம்பளத்தில் நடந்து செல்ல வேண்டும். நண்பகல் 12 மணிக்கு வானையும் பூமியையும் வணங்க வேண்டும்" என்றார் அவர்.

2005ஆம் ஆண்டில் பாவ் தோவ் நகரில் முதலாவது பாரம்பரிய பழக்கவழக்க திருமண விழா கொண்டாட்ட நிறுவனம் நிறுவப்பட்டது. காலம் செல்ல செல்ல, இளைஞர்கள் மென்மேலும் பாரம்பரிய திருமண விழாவை விரும்பத் தொடங்கியுள்ளனர்.