• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-27 09:54:34    
அறிவாளி முயலுக்கு மூன்று வளைகள்

cri

ச்சி (Qi) நாட்டின் தலைமையமைச்சர் மெங் ச்சாங்ச்சுன் (Meng Changjun). ஃபெங் ஷுவான் (Feng Xuan) என்பவன் தலைமையமைச்சரின் பின்னால் வால் போல் ஒட்டிக்கொண்டு செல்லும் சீடன். ஒரு உதவியாளன் போல் எப்போதும் அவரோடு இருப்பான். சீடனாக பின் தொடர்ந்து கொண்டிருப்பவன் என்பது ஒருபுறமென்றாலும், அட்டை போல் ஒட்டிக்கொண்டிருக்கும் அவனை தலைமையமைச்சர் மெங் ச்சாங்ச்சுன் (Meng Changjun) அவனை முதலில் பெரிதாக கண்டுகொள்ளவில்லை, பொருட்படுத்தவில்லை. ஒருமுறை ஷியுவே (Xue) என்ற தனது கட்டுப்பாட்டின் கீழிருந்த இடத்திலிருந்து கடன் நிலுவைகளை திரும்பப்பெற்று வர யாரையாவது அனுப்பவேண்டும் என்று எண்ணினார் தலைமையமைச்சர். உடனே ஃபெங் ஷுவான் (Feng Xuan) தான் அந்தக் கடமையை செய்து முடிக்க முன்வந்தான். புறப்படுவதற்கு முன் ஃபெங் ஷுவான் (Feng Xuan), தலைமையமைச்சரிடம் தான் என்ன பெற்று வரவேண்டும் என்று கேட்டான். அதற்கு தலைமையமைச்சர் மெங் ச்சாங்ச்சுன் (Meng Changjun), தனது வீட்டில் எது குறைகிறது என்று அவன் கருதுகிறானோ அதை பெற்று வருமாறு கூறினார். ஷியுவே (Xue) சென்றடைந்த ஃபெங் ஷுவான் (Feng Xuan), கடன்களை அனைத்தையும் தள்ளுபடி செய்ததோடு, கடன் பிணைப்பத்திரங்களையும் தீயிட்டு எரித்தான். பின்னர் வீடு திரும்பிய ஃபெங் ஷுவானை (Feng Xuan) கண்டதும் தலைமையமைச்சர் மெங் ச்சாங்ச்சுன் (Meng Changjun) அவன் என்ன கொண்டுவந்தான் என்று கேட்டார். அதற்கு ஃபெங் ஷுவான் (Feng Xuan) வீட்டில் குறைவாக இருந்த அறநெறியை, தருமத்தை கொண்டுவந்தததாக கூறினான். ஃபெங் ஷுவான் (Feng Xuan) கூறியதன் பொருளை பின் உணர்ந்துகொண்ட தலைமையமைச்சர், கவலையும் வெறுப்புமடைந்தார்.


அடுத்த ஆண்டில், ச்சி நாட்டு அரசன் தலைமயமைச்சர் மெங் ச்சாங்ச்சுனை (Meng Changjun) பதவியிலிருந்து நீக்கினான். தலையமைச்சர் பதவியில்லாததால் தனது ஆளுகையின் கீழிருந்த ஷியுவே (Xue)வுக்கு திரும்பினார் மெங் ச்சாங்ச்சுன் (Meng Changjun). அவருக்கு ஷியுவேயில் (Xue) பெரும் வரவேற்பு கிடைத்தது. மக்கள் அனைவரும் அணிதிரண்டு கோகாலமாக அவரை வரவேற்றனர். மெங் ச்சாங்ச்சுன் (Meng Changjun) ஃபெங் ஷுவானை பார்த்து, நீ எனக்கு கொண்டுவந்த அறநெறியை, தர்மத்தை இப்போது என்னால் பார்க்கமுடிகிறது என்று புன்னகையோடு கூறினார். அதற்கு ஃபெங் ஷுவான் அவரை பார்த்து, அறிவாளி முயலுக்கு மூன்று வளைகள் உண்டு ஆனால் உங்களுக்கு ஒன்றுதான் இருக்கிறது. நீங்கள் இன்னும் பாதுகாப்பாக இல்லை, நான் சென்று மேலும் இரண்டு வளைகளை உங்களுக்காக தோண்டுவேன் என்றான். பின்னர் ஃபெங்ஷுவான் வெய் நாட்டுக்குச் சென்று, அந்நாட்டு அரசரிடம், ச்சி நாடு மெங் அவர்களை பதவியிலிருந்து நீக்கிவிட்டது என்றும், யார் மெங்கின் பணியை தமக்காக்கிக்கொள்கிறாரோ, அவருக்கு பெரும் செல்வமும், ஆற்றலும் அடைவர் என்று கூறினான். மெங்கின் பெருமையறிந்த வெய் நாட்டு அரசன், பொன்னும் பொருளும், பல தேர்களும் கொடுத்து தனது தூதனை அனுப்பி, மெங் ச்சாங்ச்சுன்னை (Meng Changjun) தந்து தலைமையமைச்சராக பணிபுரியுமாறு வேண்டினான். வெய் நாட்டுத் தூதன் தனது அரசனின் அன்பளிப்புகளோடு சென்று மூன்று முறை சந்தித்து தன் அரசனின் வேண்டுகோளை முன்வைத்தபோதும், மூன்று முறையும் மறுத்துரைத்து அவன் திருப்பியனுப்பப்பட்டான். இந்த விடயத்தை கேட்ட ச்சி நாட்டு அரசன் தனது தூதனை பெருமளவு பொன்னும், பொருளும், தேர்களும், வாள்களும் கொடுத்தனுப்பி, மெங் ச்சாங்ச்சுன்னை (Meng Changjun) மீண்டும் தனக்கே, தன்னுடைய நாட்டுக்கே தலைமையமைச்சராக பணியாற்றுமாறு வேண்டினான். பிறகு ஃபெங்ஷுவான்,

மெங்கிடம் அரசனை அரசகுல கோயிலையும், கோயிலின் பலிபூசை பாத்திரங்களையும் ஷியுவேவுக்கு (Xue) இடமாற்றுமாறு அரசனிடம் கூறச்சொன்னான். இவையெல்லாம் நடந்தபின் மீண்டும் தலைமையமைச்சரான தனது ஆசானிடம் "இப்போது உங்களுக்கு மூன்று வளைகள் தயார். தலையணையை தட்டிப்போட்டு நன்றாக தூங்கலாம்" என்று சொன்னானாம் ஃபெங்ஷுவான். மதிநுட்ப ஆலோசனைகள் சொல்ல ஃபெங்ஷுவான் அருகிருக்க எந்த ஆபத்தும், சிக்கலுமின்றி பல பத்தாண்டுகள் தலைமையமைச்சராக பணியாற்றினார் மெங் ச்சாங்ச்சுன் (Meng Changjun).
பின்னாளில் அறிவாளி முயலுக்கு மூன்று வளைகள் Jiao tu san ku என்ற உருவகம் எல்லாவித நிகழ்வுகளுக்கு ஆயத்தமாகும் நபர்களை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. தலையணையை தட்டிப்போட்டு நன்றாக தூங்கு Gao zhen wu you என்ற சொல்லடை எல்லாம் நலம், சிக்கலேதுமில்லை, எனவே கவலையின்றி இருக்கலாம் என்பதை குறிக்க பயன்படுத்தப்பட்டது.