• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-27 10:04:46    
இந்திய ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுவின் அதிகாரிகளின் பார்வையில் பெய்ஜிங் ஒலிம்பிக் 1

cri


29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் திங்கள் 8ம் நாள் முதல் 24ம் நாள் வரை பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இந்தியா 56 விளையாட்டு வீரர்கள் மற்றும் விராங்கணைகளை அனுப்பியது. துப்பாக்கி சுடுதல், நீச்சல், குத்துச் சண்டை முதலிய போட்டிகளில் அவர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டு வல்லரசாக இந்தியா திகழவில்லை. இருந்தபோதிலும், இந்திய விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளும் உற்சாகத்துடன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியின் போது, இந்தியக் குழுவின் அதிகாரிகள், இந்தியக் குடும்பம் என்று அழைக்கப்படும் guo yi ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, பெய்ஜிங் மாநகரம் ஆகியவை பற்றிய கருத்துக்களை அவர்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர். இந்திய ஒலிம்பிக் குழுவின் அதிகாரி Rangil Singh கூறியதாவது
பறவைக் கூடு விளையாட்டுரங்கம் பெரியதாகவும் அழகாகவும் உள்ளது. ஒலிம்பிக் கிராமமும் மிகவும் பெரியது. இப்போட்டிக்கான ஏற்பாடு மற்றும் அமைப்புப் பணி அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மிகப்பல மக்கள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். பறவை கூட்டில் வெற்று இருக்கை ஒன்றும் இருக்கவில்லை.

நாங்கள் மாலை 4 மணிக்குப் புறப்பட்டுச் சென்று, நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு தான் ஹோட்டலுக்குத் திரும்பினோம். நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்டுரசித்து மகிழ்ந்தோம் என்றார் அவர்.
அவர் சீனாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். ஒலிம்பிக் அரங்கு மற்றும் திடல்கள், ஒலிம்பிக் கிராமம், துவக்க விழா முதலியவை பற்றிய கருத்துக்களை அவர் உற்சாகத்துடன் தெரிவித்தார். பல ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். சீனா நடத்திய நடப்புப் போட்டி இவற்றில்

மிகச் சிறந்ததாகும் என்று கருதுகின்றேன். துவக்க விழாவில் லேசர் ஒளிக்கதிர் உள்ளிட்ட பல முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. அதேவேளையில், பல பாரம்பரிய அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டன. துவக்க விழா மிகச் சிறப்பாக அமைந்திருந்தது என்றார் அவர்.
சீனா 5000 ஆண்டு கால வரலாறுடையது. ஒலிம்பிக் துவக்க விழா சீனாவின் வரலாற்றைத் தொகுத்து சிறப்பாக வெளிப்படுத்தி, மக்களைக் கவர்ந்துள்ளது என்று Rangil Singh கூறினார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பெய்ஜிங் மாநகரின் பல்வேறு அமைப்புப் பணிகளை அவர் வெகுவாகப் பாராட்டினார். அவர் கூறியதாவது
மாபெரும் அமைப்புப் பணிகளை பெய்ஜிங் மாநகரம் சிறப்பாக மேற்கொண்டுள்ளது. பல சுரங்க இருப்புப் பாதை நெறிகள் புதிதாக கட்டியமைக்கப்பட்டன. வீதிகள் அகலமானவை. இது மட்டுமல்ல, சாலைகளின் இரண்டு பக்கங்களிலும், பச்சை மரங்கள், பல வண்ண பூக்கள் முதலியவற்றால் அலங்கரிப்பட்டுள்ளன என்றார் அவர்.

தவிர, போட்டியில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்கள் குறித்து அவர் உயர்வாக மதிப்பிட்டார். இளைஞர்கள் இன்னல்களையும் களைப்பையும் பொருட்படுத்தாமல், மக்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றனர். ஒவ்வொரு தொண்டர்களின் முகத்திலும் அழகான புன்னகை காணப்படுகின்றது என்று அவர் கூறினார்.