
கன்னிக்காட்டின் நிலைமை, கூடிய அளவில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில், கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்துக்கும் மிகவும் தாழ்வான இடத்துக்குமிடையிலான இடைவெளி 800 மீட்டராகும். பூங்காவின் வளைவு சுளிவான நடைப்பாதை, மலை நெடுகிலும் கட்டப்பட்டது. ஒரு பக்கம் செங்குத்தான மலையும் மற்றொரு பக்கம் செங்குத்துப் பாறையும் காணப்படுகின்றன. மலைப்பாதை குறுகலானது.

மிகவும் அகலமான இடத்தில் 2 பேர் ஒன்றாகு நடக்க முடியாது. மிகவும் குறுகலான இடத்தில் ஒருவர் மட்டும் சாய்ந்து நடக்க நேரிடும். மிருதுவான இடத்தில், கூரிய பாறைகள் காணப்படுவதால், பயணிகள் மேல் நோக்கிச் செல்லவோ கீழ் நோக்கிச் செல்லவோ முடியாமல், குதிக்காலால் நடக்க நேரிடுகிறது. குண்டாக இருப்போர் கவலைப்படும் இடம் என ஒன்று, இப்பூங்காவில் உள்ளது. வழியின் நடுவில் அமைந்துள்ள மாபெரும் பாறைக்கும் இவ்வழியின் பக்கத்திலுள்ள மலைக்குமிடையில் பல பத்து சென்டி மீட்டர் தொலைவு மட்டும் உள்ளது. பயணிகள் ஒரு சாய்வாக, மலையை நெருங்கிச் செல்ல வேண்டி நேரிடும்.
|