• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-26 08:59:59    
சீனாவின் நாசி இனம்

cri

சீனாவின் நாசி இன மக்கள், முக்கியமாக யுன்னான் மாநிலத்தின், லிஜியாங்-நாசி தன்னாட்சி மாவட்டத்தில் கூடி வாழ்கின்றனர். சிலர், சிச்சுவானின் yanbian மாவட்டத்திலும் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் ச்சிகாங் மாவட்டத்திலும் வாழ்கின்றனர். இவ்வினத்தின் மக்கள் தொகை, 2 இலட்சத்து 78 ஆயிரமாகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மதிப்பிடற்கரிய மரபுச்செலவமான, தொங்பா சித்திர எழுத்துக்களை நாசி இன மக்கள் உருவாக்கினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்தி தொங்பா திருமுறையை இயற்றினர். நாசி இன மக்களின் வாழ்க்கையின் பல்வேறு துறைகளை விவரித்த அத்திருமறை, உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பரவியுள்ளது. இது, நாசி இனத்தின் கலைக்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.

நாசி இன மக்கள், முக்கியமாக வேளாண்துறையில் ஈடுபடுகின்றனர். நெல், மக்காச்சோளம், கோதுமை, பருத்தி, கரும்பு, உருளைக்கிழங்கு முதலியவை, இங்குள்ள முக்கிய பயிர் வகைகளாகும். கால்நடை வளர்ப்பும், கைவினைத் தொழிலும், சிறப்பாக வளர்ந்து வருகின்றன. இங்குள்ள லி ச்சியாங் குதிரை, சீனாவில் புகழ் பெற்றது. தற்போது, நிலக்கரி, வேதியல் உர உற்பத்தி, முதலிய தொழில் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சின் சா ஆற்றின் இரு கரைகளிலும், பல்வகை சீனப் பாரம்பரிய மருந்து மூலிகைகள் விளைகின்றன. நாசி இன மக்களின் கைவினைத் தொழில், வளர்ந்த நிலையில் இருக்கின்றது. அன்றாட உணவு பாத்திரங்கள், கைவினையினால் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் வெண்கலப் பாத்திரங்களின் தயாரிப்புக்கு, நீண்டகால வரலாறு உண்டு.

தொங்பா என்ற மதத்தை நாசி இன மக்கள் நம்புகின்றனர். சிலர் லாமா மதத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஹான் இன மக்களின் விழாக்களை கொண்டாடுகின்றது தவிர, தீப்பந்த விழா, மார்ச் டிராகன் கோயில் திருவிழா, ஜூலை குதிரைச் சந்தை திருவிழா முதலியவை, நாசி இனத் தனிச்சிறப்பு வாய்ந்த விழாக்களாகும்.

நாசி இன மக்கள், சில தடைவிதிகளைக் கடைபிடிக்க வேண்டும். அவை குதிரையில் கிராமத்திற்குள் நுழையும் முன், குதிரையிலிருந்து இறங்க வேண்டும். சொர்க்கத்தை வழிபடும் இடங்களில், குதிரையை கட்டக் கூடாது. சொர்க்கம், மூதாதையர், போர் கடவுள் ஆகியோரை வழிபடுவதை, பிற இன மக்கள் பார்க்கம் கூடாது. உழு மாடுகள், பொருட்களை ஏற்றிச்செல்லும் குதிரைகள், உதயத்தை அறிவிக்கும் சேவல்கள் ஆகியவை கொல்லப்பட கூடாது. நாய் இறைச்சியை சாப்பிட கூடாது, ஆகியவையாகும்.