2008ஆம் ஆண்டு ஊனமுற்றோருக்கான பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்காக புனிதத் தீபமேற்றும் விழா மற்றும் தீபத் தொடரோட்டத்தின் துவக்க விழா பெய்ஜிங்கின் சொர்க்க கோயிலில் நடைபெற்றது. சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ், தீபத் தொடரோட்டத்தின் துவக்கத்தை அறிவித்தார். துணை அரசுத்தலைவர் ஷி ச்சின்பீங், ஊனமுற்றோருக்கான பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அமைப்புக் குழுவின் தலைவர் லியூ ச்சி, ஊனமுற்றோருக்கான சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுக் கமிட்டியின் தலைவர் Philip Craven முதலியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
ஊனமுற்றோருக்கான பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்காக புனிதத் தீபத்தை ஏற்றுவது, ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டி சீனாவில் துவங்குவதற்கான சின்னமாக இருக்கிறது.
இன்று முதல், சீனாவின் 11 மாநிலங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களின் 11 நகரங்களில், 10 நாள் நீடிக்கும் தீபத் தொடரோட்டம் மேற்கொள்ளப்படும்.
|