• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-28 16:32:39    
யுங் ஹே குங் என்னும் லாமா கோயில்

cri

பெய்ஜிங் மாநகர், 3000 ஆண்டுகால வரலாறுடைய பண்டைகால நகரமாகும். பெய்ஜிங்கில் நாள்தோறும் புதிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, 2001ம் ஆண்டில், 29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் அதிகாரத்தைப் பெற்ற பிறகு, பெய்ஜிங்கில் நாளுக்கொரு மாற்றம் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. அதேவேளை, அரன்மணை மாளிகைகள், பொது மக்கள் வாழ்கின்ற நான்கு பக்கம் வீடுகள் நடுவில் முற்றம் கொண்ட கட்டடங்கள், நம்பிக்கையாளர்கள் நிரம்பி

வழிந்த புத்த மத கோயில்கள் ஆகியவற்றின் மூலம், மக்கள், பெய்ஜிங் மாநகரின் பழைய கதைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
பெய்ஜிங்கில் மொத்தம் 33 புத்த மத கோயில்கள் உள்ளன. அவை, புறநகரின் காட்டுப் பிரதேசத்திலும், நகரப்பிரேதசத்தின் உயரமான கட்டிடங்களுக்கிடையிலும் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள் குறைந்தது நூறு ஆண்டுகால வரலாறுடையவை.
பெய்ஜிங் நகரின் வடக்கிழக்கு பகுதியிலுள்ள யுங் ஹே குங் என்னும் லாமா கோயில், சீனாவின் உள்பிரதேசத்தில் மிக பெரிய திபெத் புத்த மத கோயிலாகவும், அரண்மனை

மாளிகை பாணியுடைய கோயிலாகவும் உள்ளது. முன்பு, இங்கு, சிங் வம்ச காலத்தின் அரசர் யூங் செங் இளவரசரான காலத்தில் வாழ்ந்த மாளிகையாகும். அது மட்டுமல்ல, சிங் வம்ச கால அரசர் சியே லூங் பிறந்த இடமுமாகும். இவ்விரு அரசர்களினால், யூங் ஹே குங் என்னும் லாமா கோயில், இன்பத்தின் பிறப்பிடம் என கருதப்படுகிறது.
தற்போது, இக்கோயில், பெய்ஜிங்கில் நம்பிக்கையாளர்கள் மிகவும் அதிகமாக செல்லும் கோயிலாக மாறியுள்ளது. பயணிகளுக்கு வசதி வழங்கும் வகையில், யூங் ஹே குங், DVD குறுந்தகடு வடிவிலான நுழைவுச் சீட்டைத் தயாரித்து, அதன் மூலம் கோயிலின்

வரலாற்றை அறிமுகப்படுத்துவதோடு, கோயிலின் மூத்த மத குருவான Jamyang Thubtenனின் வணக்கத்தை சேர்த்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் யூங் ஹே குங் கோயில் வந்தடைவதற்கு வரவேற்பு தெரிவிக்கின்றேன். இந்தக் கோயில், இளவரசரின் மாளிகையிலிருந்து 1744ம் ஆண்டில் திபெத் புத்த மத கோயிலாக மாறியுள்ளது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக்கு பின், மாளிகைகள் திருத்தியமைக்கப்பட்டு, பல்வேறு வகை புத்த மத நடவடிக்கைகள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது, நாள்தோறும் யுங் ஹே குங் தங்கி

வணங்க வரும் பயணிகளும் நம்பிக்கையாளர்களும் மிகவும் அதிகம் என்றார் அவர்.
யூங் ஹே குங் என்னும் லாமா கோயில், சிங் வம்ச காலத்தின் நடுவண் அரசும், திபெத், உள்மங்கோலியா ஆகிய பிரதேச அரசாங்கங்களுடன் தொடர்பு கொள்ள பயன்பட்ட முக்கிய பாலமாகும். தற்போது, இதில், ஏராளமான திபெத் புத்த மத வரலாற்று தொல் பொருட்கள் உள்ளன.