• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-28 16:04:11    
பெய்சிங் ஒலிம்பிக் போட்டிக்கான பாராட்டு

cri

24ம் நாள் நிறைவடைந்த பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பல்வேறு நாடுகளின் அரசியல் மற்றும் விளையாட்டுத் துறையிலான பிரமுகர்களின் மனங்களில் ஆழமாக பதிந்துள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அவர்கள் உயர்வாக பாராட்டினர்.

தாய்லாந்தின் ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுவுக்கு நடத்திய கொண்டாட்ட நடவடிக்கையில் தாய்லாந்து தலைமை அமைச்சர் Samak Sundaravej பேசுகையில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தலைசிறந்த அமைப்புத் திறமையை பாராட்டியதோடு, இது ஆசியாவின் பல்வேறு நாடுகளின் மக்களுக்கு பெருமை தந்துள்ளது என்று தெரிவித்தார்.

சீனப் பிரதிநிதிக்குழு இப்போட்டியில் பெற்ற சாதனை என்பது, சீனாவின் விளையாட்டு ஆற்றலை வெளிக்காட்டுகிறது என்று தாளத்திற்கேற்ற சீருடற்பயிற்சி போட்டியின் முக்கிய பயிற்சியாளர் Irina Viner கூறினார். சீனப் பிரதிநிதிக்குழு அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சிறந்த சாதனை பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்ததாக ரஷிய தொலைக்காட்சி நிலையம் கூறியது.

25ம் நாள் பெய்சிங்கிலிருந்து பிரான்ஸுக்கு திரும்பிய பிரான்ஸின் தடகள கூட்டமைப்பின்Bernard Amsalem பேசுகையில், தான் கலந்து கொண்ட 5 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மிக வெற்றிகரமான ஒலிம்பிக் போட்டியாகும் என்று கூறினார்.

ஆடவர் 56 கிலோ எடைக்கு குறைவானோர் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற இந்தோனேசியாவின் விளையாட்டு வீரர் Eko Irawan எமது செய்தியாருக்கு அளித்த பேட்டியில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மிக நல்ல வசதிகளை வழங்கியது, குறிப்பாக, ஒலிம்பிக் கிராமமும் போட்டிக்கான விளையாட்டு திடல்களும் அரங்குகளும் நன்றாக அமைந்திருந்தன என்று கூறினார்.