2008ம் ஆண்டு பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனிதத் தீபம் இன்று முற்பகல் பெய்சிங்கின் சொர்க்கக் கோயிலின் பூங்காவில் ஏற்றப்பட்டது. பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக துவங்கியது என்று சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அறிவித்தார்.
சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டியின் பண்ணுடன், 2008ம் ஆண்டு பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனிதத் தீபத்தை திரட்டவரான சீன ஊனமுற்றோர் கலைக் குழுவின் மகளிர் நிகழ்ச்சி தொகுப்பாளர் Jiang Xintian சொர்க்கக் கோயிலுக்கு வந்தார். குழியாடியிலிருந்து புனிதத் தீபத்தை அவர் வெற்றிகரமாக பெற்றார். இதைத் தொடர்ந்து, சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அறிவிப்பு மேற்கொண்டார். அவர் கூறியதாவது:
2008ம் ஆண்டு பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டம் துவங்குகின்றது என்றார் அவர்.
அடுத்த 9 நாட்களுக்குள், ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டம் கால எழுச்சி மற்றும் சீனப் பண்பாட்டு அம்சங்களுடன் நடைபெறும். தோயாங், நான் சிங், சாங் சென், ஷாங்காய், சிங் தாவ், செங் ஷா முதலிய சீனாவின் 11 மாநிலங்களின் 11 நகரங்களில் தீபத் தொடரோட்டம் நடைபெறும். ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவான செப்டம்பர் 6ம் நாளில் இது தேசிய விளையாட்டரங்கான பறவைக் கூட்டை வந்தடைந்து, பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபக் கலசத்தில் ஏற்றப்படும்.
ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை, ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முன்னறிவிப்பாகும். பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவர் லியு சி இன்று விழாவில் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டத்துக்கான நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:
பெய்சிங் சொர்க்கக் கோயிலில் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனிதத் தீபம் ஏற்றியது, 2008ம் ஆண்டு பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அருமையான நல்வாழ்த்துக்களையும், ஊனமுற்றோருக்கான மேலான கவனத்தையும், அதிக ஆர்வத்தையும் கனவையும் எடுத்துக்காட்டுகின்றது மேலும் இது மக்களை ஊனமுற்றோருடன் மனதார இணைந்து, பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மாபெரும் பக்கத்தை கூட்டாக திறக்க உதவும் என்று நாங்கள் உளமார நம்புகின்றோம் என்றார் அவர்.
ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவது, மனித சமூகத்தின் பண்பாட்டையும் முன்னேற்றத்தையும் கோடிட்டுக்காட்டியுள்ளது. பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனிதத் தீபம் ஒலிம்பிக் எழுச்சியை அடையாளப்படுத்தியது. மனித குல இணக்கம், அன்பு மற்றும் பரஸ்பர உதவியின் கருத்துக்களை இது பரப்புவதோடு, சர்வதேச ஊனமுற்றோர் பணியின் வளர்ச்சியையும் தூண்டும் என்று லியு சி தெரிவித்தார்.
நடப்பு ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவில் அதிகாரப்பூர்வமாக துவங்குவதை ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனிதத் தீபம் ஏற்றுவது கோடிட்டுக்காட்டியுள்ளது என்று சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Philip Craven விழாவில் சுட்டிக்காட்டினார். அவர் கூறியதாவது:
சீன ஊனமுற்றோர் கலைக் குழுவின் மகளிர் நிகழ்ச்சி தொகுப்பாளர் Jiang Xintian சொர்க்கக் கோயிலுக்கு வந்தார்.
அடுத்த சில நாட்களுக்குள், போட்டி மற்றும் வாழ்க்கையில், ஊனமுற்றோர் விளையாட்டின் வீரர்கள் தனிச்சிறப்பு வாய்ந்த விளையாட்டு எழுச்சியை வெளிப்படுத்துவர். ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளைளயாட்டுப் போட்டியின் புனிதத் தீபம் அதன் சின்னமாக மாறும். இவ்வெழுச்சியுடன், அவர்கள் அனைத்து தடைகளையும் நீக்கி, தலைசிறந்த சாதனைகளை உருவாக்க பாடுபடுவார்கள் என்றார் அவர்.
புள்ளிவிபரங்களின் படி, தற்போது, முழு உலகத்தில் 65 கோடி ஊனமுற்றோர் உள்ளனர். பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, 150 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 4000க்கு அதிகமான ஊனமுற்றோர் விளையாட்டின் வீரர்கள், 2500க்கு அதிகமான பயிற்சியாளர்கள் மற்றும் பிரதிநிதிக் குழு அதிகாரிகள் ஆகியோர் இப்போட்டியில் கலந்துகொள்வார்கள். வரலாற்றில் முன் கண்டிராத அளவுக்கு மிகப் பெரிய ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாக இது அமையும்.
சீன ஊனமுற்றோர் சம்மேளனத்தின் தலைவர் Deng Bufang, விழாவில் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, முழு உலக மக்களின் விழாவாகும். இந்த மாபெரும் வாய்ப்பை நாங்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தோம். முழு உலக மக்களுடன் இணைந்து, ஓர் உலகம், ஒரு கனவு என்ற எழுச்சியில், மனித குலத்தின் அமைதி, முன்னேற்றம், நட்பு, மனிதம் ஆகியவற்றை முன்னேற்ற பாடுபட்டு வருகின்றோம் என்றார் அவர்.
|