• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-29 09:41:14    
இந்திய ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுவின் அதிகாரிகளின் பார்வையில் பெய்ஜிங் ஒலிம்பிக் 2

cri

துவக்க விழாவைப் பார்வையிட்டப் பின், ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் வழி தவறிவிட்டோம். ஆங்கிலம் பேசிய தொண்டர் ஒருவர் எங்களுக்கு சரியான வழியைக் காட்டி, எங்களுடன் சேர்ந்து ஹோட்டலுக்குச் சென்றார். இதன் மூலம், விரும்தோம்பல் மிக்க சீன மக்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள முடிகிறது என்றார் அவர்.
இந்திய ஒலிம்பிக் குழுவின் மற்றொரு அதிகாரி குமார் பிராதனுக்கு ஷாங்காய், ஹாங்காங், மக்கௌ ஆகிய சீன நகரங்களில் பயணம் மேற்கொண்ட அனுபவம் உண்டு. பெய்ஜிங் மாநகரம் அவருக்கு வேறுப்பட்ட உணர்வை வழங்கியது என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது

உரை

எங்களைப் பொருத்த வரை, போக்குவரத்து பிரச்சினை ஒன்றும் இல்லை. சுரங்க தொடர் வண்டி, பேருந்து ஆகியவற்றின் மூலம் பயணம் செய்துள்ளோம். நல்ல அனுபவம். போக்குவரத்து நிலைமை சிறப்பாக உள்ளது என்றார் அவர்.
சீனாவின் பாரம்பரிய பண்பாடு, வரலாற்றுச்சிறப்பு மிக்க காட்சி தலங்கள் ஆகியவை தன்னை மிகவும் ஈர்த்துள்ளன என்று குமார் பிரதான் கூறினார். சீனாவுக்கு வருவதற்கு முன், பெருஞ்சுவர், அரண்மணை அருங்காட்சியகம், தியேன் ஆன் மன் சதுக்கம் முதலியவற்றைச் சுற்றிப்பார்ப்பதற்குச் சிறப்பாக திட்டம் வகுத்துள்ளார். அவருடைய

பார்வையில், அழகான இவ்விடங்கள் சீனப் பாரம்பரியப் பண்பாட்டின் சுருக்கமாகும். அவர் கூறியதாவது
உரை
இவ்விடங்கள் மிகவும் அழகானவை. பெய்ஜிங்கிலுள்ள காட்சித் தலங்களைப் பார்க்கும் வாய்ப்பு எதையும் இழக்க விரும்பவில்லை என்றார் அவர்.
பொது மக்களின் வாழ்க்கையின் மீதும் அவர் ஆர்வம் காட்டினார். பழைய பெய்ஜிங் கட்டிடங்களில் ஹுதுங் என்பது மிக சிறப்பானது என்று அவர் கூறினார். ஏனென்றால், இது வரலாற்றையும் பண்பாட்டையும் காட்டியதுடன், பெய்ஜிங் மக்களின் உண்மையான வாழ்க்கையையும் வெளிப்படுத்துகின்றது என்று அவர் கருத்து தெரிவித்தார்.

சீனாவில், ஒலிம்பிக் துவக்க விழாவைக் கண்டுகளித்து, சீனப் பண்பாட்டின் சிறப்பை அறிந்து கொண்டதுடன், பெரிய அளவுடைய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பல்வேறு அனுபவங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். குமார் பிரதான் கூறியதாவது
உரை
2010ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்தியாவின் புதுதில்லியில் நடைபெறவுள்ளது. பெய்ஜிங்கிலிருந்து பெரிய அளவு விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்து நடத்தும் பல அனுபவங்களைக் கற்றுக்கொண்டோம். இவ்வாறு இந்தியா இத்தகைய விளையாட்டுப் போட்டியை நடத்த முடியும். சீனா மிகவும் சிறப்பாக செயல்படுத்தியது. இந்தியா இதன் போன்ற சிறப்பான ஏற்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியுமா என்பது தெரியாது. ஆனால் அதற்காக பாடுபடுவோம் என்றார் அவர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 10 மீட்டர் குழல் துப்பாக்கிப் போட்டியில் இந்திய வீரர் அபினவ் பிந்திரா இந்திய வரலாற்றில் முதலாவது தனிநபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். கடந்த 28 ஆண்டுகளில் இந்தியா பெற்ற முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.