• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-29 09:44:44    
சொந்த கடமையை நினைவில் பதிவு செய்த ச்சு தான்

cri
ஹெய் லோங் ஜியாங் மாநிலத்தில் ச்சு தான் என்ற பெயர் அனைவருக்கும் தெரிந்தது. ஹெய் லோங் ஜியாங் தொலைக்காட்சி நிலையத்தின் இரவுச் செய்தியறிக்கையின் அறிவிப்பாளராக அவர் 6 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இவ்வாண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் ஆண்டாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை அறிவித்து, ஒலிம்பிக் எழுச்சியைப் பரவல் செய்வதால், தமது கடமையையும் பொறுப்பையும் அவர் ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறார்.

கடந்த மார்ச் திங்கள், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி ஒப்படைக்கும் நிகழ்ச்சியை அறிவிக்க, ஹெய் லோங் ஜியாங் தொலைக்காட்சி நிலையத்தின் சிறப்புச் செய்தியறிவிப்புக் குழுவின் உறுப்பினரான ச்சு தான், மற்ற செய்தியாளர் சிலருடன் இணைந்து கிரேக்கத்துக்குச் சென்றார்.
மார்ச் 23ஆம் நாள் பிற்பகல் தெங் யா பிங் உள்ளிட்ட 5 ஒலிம்பிக் நட்சத்திரங்கள் Coubertin நினைவுச் சின்னத்துக்கு முன் அமைதியைக் குறிப்பிடும் olive மரக் கன்றை நட்டனர். இந்நிகழ்ச்சி நிறைவுற்ற பின், பேட்டி அளிக்க விரும்பாத அவர்கள் அவ்விடத்திலிருந்து விலகத் தயாராக இருந்தனர். ஆனால் அவர்களைப் பேட்டி காணும் வாய்ப்பைக் கைவிடக் கூடாது என்று ச்சு தான் நினைத்தார். ரஷியாவின் புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக் வீரர் Alexei Nemovவின் முன் சென்ற அவர், "சீனாவில், ரஷியாவிலிருந்து மிகக் குறைவான தூரம் கொண்ட மாநிலம் ஹெய் லோங் ஜியாங் தான்" என்று பதட்டத்துடன் ரஷிய மொழியில் Nemovஇடம் கூறினார். இத்தகைய

தொடக்க உரையைக் கேட்ட செய்தியாளர்கள் அனைவரும் வியப்படைந்தனர். அவரது இச்செயல், ஒலிம்பிக் நட்சத்திரங்களைப் பேட்டி காணக் கூடிய வாய்ப்பை வெற்றிகரமாக உருவாக்கியது.
மார்ச் 23ஆம் நாள், ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும் முந்தைய நாளாகும். அப்போதைய கிரேக்க ஒலிம்பியா நகர் கண்டிப்பான விழிப்பு நிலையில் இருந்தது. ச்சு தான் தமது சக பணியாளர்களுடன் இணைந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும் இடமான பண்டைய திடலை சென்றடைந்த போது, நுழைவாயில் சுற்றி வளைக்கப்பட்டது. அதற்குள் நுழைய வேறு வழி இல்லாமல் கவலைப்பட்ட போது, கிரேகத்தில் அறிந்து கொண்ட நண்பர் ஒருவரை ச்சு தான் சந்தித்தார். இந்த நண்பரின் உதவியுடன், பண்டைய திடலுக்குள் நுழைந்து பேட்டி காணும் அனுமதியை ச்சு தான் அற்புதமாக பெற்றார். தடை ஏதுமின்றி

செய்தியறிக்கையை நிறைவேற்றிய போது, விசாலமான அந்தச் சதுக்கத்தில் தனது செய்தியறிக்கைக் குழு மட்டுமே, ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட இடத்துக்குள் செய்தியறிக்கை வழங்கிய ஒரே ஒரு தொலைக்காட்சி செய்தி ஊடகம் என்று ச்சு தான் கண்டறிந்தார். உலகளவில் ஒரேயொரு ஒளிபரப்பை அவர்கள் உருவாக்கினர்.
ஹெய் லோங் ஜியாங் மாநிலத்தின் ஒதுக்குப்புறமான ஒரு கிராமத்தில், இரவுச் செய்தியறிக்கை நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நன்கொடை வழங்கி நிறுவப்பட்ட ஒரு துவக்கப் பள்ளி உள்ளது. அண்மையில், ச்சு தான் தமது சக பணியாளர்களுடன் சேர்ந்து இப்பள்ளியிலுள்ள மாணவர்களைச் சென்று பார்த்தார்.
அங்கே, தமது நன்கொடையுடன் கல்வி பயில்கின்ற குழந்தையை ச்சு தான் சந்தித்தார்.

ஒரு நாள் லியூ சியாங் போல் உலகப் பதிவை உருவாக்குவது என்பது விளையாட்டுத் துறையில் திறன் கொண்ட இந்த ஆண் குழந்தையின் கனவு. ஒலிம்பிக் முழக்கம், ஓர் உலகம் ஒரு கனவு என்பதாகும் என்று ச்சு தான் அவரிடம் கூறினார். ஒவ்வொருவருக்கும் தனக்குரிய கனவு உண்டு. கனவை நிறைவேற்றும் போக்கில் இன்னலையும் தடையையும் சந்திக்கக் கூடும். ஆனால் அவை தற்காலிகமாக நிலவுகின்றன. சளையாத முயற்சி செய்து, மன உறுதியுடன் போராடினால், கனவு உண்மையாகும் நாளை நாங்கள் வரவேற்கலாம் என்றும் அவர் கூறினார்.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040