கடந்த சில நாட்களில், சர்வதேச அரசியல் துறையினர் சிலர், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து பாராட்டினர்.
செனகல் வளர்ச்சி கொள்கை ஆய்வு மையத்தின் தலைவர் அலி சோ நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றமை, சீன மக்களின் பொருமை மட்டுமல்ல, அமைதியை விரும்பும் உலக மக்களின் வெற்றியும் ஆகும் என்று தெரிவித்தார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஒரு சன்னல் போன்று, அறிவியல் தொழில் நுட்பம், பொருளாதாரம், சமூகம், மானிடவியல், விளையாடு ஆகிய துறைகளில் சீனா பெற்றுள்ள சாதனைகளை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம், உலகம், சீனாவை மேலும் புரிந்துகொண்டுள்ளது. தலைச்சிறந்த துவக்க மற்றும் நிறைவு விழாக்கள், அமைப்புப் பணிகள் ஆகியவற்றின் மூலம், சீனா, தமது வலிமையான விளையாட்டு ஆற்றலை எடுத்துக்காட்டி, உலக மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது என்று பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் Bernard Debre கூறினார்.
|