பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நிறைவடந்த பிறகு, சீனாவின் சுற்றுலா துறை, சுறுச்சுறுப்பான காலத்தில் நுழைந்துள்ளது.
சீனாவின் சுற்றலா வாரியங்கள், ஒலிம்பிக் சுற்றுலா ஆண்டு என்ற தலைப்பில், இந்தத் துறையை விரிவாக கையாண்டு வருகின்றது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை வரவேற்க, சீனா போதியளவில் தயாராகியுள்ளது என்று சீனத் தேசிய சுற்றுலா ஆணையத்தின் துணைத் தலைவர் வாங் ச்சிபாஃ நேற்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி உந்துவிசை பங்காற்றியதால், 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில், சீனாவின் சுற்றுலா துறை, உச்ச நிலைக்கு வரும். பெய்ஜிங், உலகளவில் மிக அதிகமான அந்நிய பயணிகள் வருகை தரும் மாநகரமாக மாறும். தியான் சின், சிங்தாவ் உள்ளிட்ட பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு துணைபுரிந்த நகரங்களிலும், பல சுற்றுலா நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
|