• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-01 20:59:55    
சீனப் பண்பாடுகளின் ஈர்ப்பு ஆற்றல்

cri

ஆகஸ்ட் திங்கள் 8ம் நாள் முதல் 24ம் நாள் வரை, 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்ஜிங்கில் நடைபெற்றது. இது, ஒலிம்பிக் குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆக்கப்பூர்வமாகக் கலந்துகொண்ட விளையாட்டு விழாவாகும். இது மட்டுமல்ல, உலகிடம் சீனப் பண்பாடுகளை அறிமுகப்படுத்தும் பெரிய மேடையாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி விளங்கியது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பல்வகை பொருட்காட்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், பெய்ஜிங் மாநகரின் நடையுடையபாவனைகள் ஆகியவை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பர்களை பெரிதும் ஈர்த்தன.


ஆகஸ்ட் திங்கள் 8ம் நாள் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில், சீனாவின் பாரம்பரியப் பண்பாடுகளின் இணக்கம் பற்றிய கருத்துக்கள், சீனாவின் நீண்டகால வரலாறு கொண்ட பண்பாடு முதலியவை முழுமையாக வெளிப்படுத்தப்பட்டன. விழாவில் மலைகளும் நதிகளும் இணைந்த ஒரு பொரிய சீனப் பாரம்பரிய ஓவியம் மெதுவாக விரிக்கப்பட்டது. தாள் தயாரிப்பு உள்ளிட்ட உலகில் புகழ்பெற்ற சீனாவின் நான்கு மாபெரும் கண்டுபிடிப்புகள், சீனாவின் மிகப் பழைய இசைக்கருவி, இயற்கை எழுச்சியை காட்டும் taiji, சீனாவின் பண்டைய, மேலை நாடுகளுடனான வணிக வர்த்தக மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கான பட்டுப் பாதை ஆகியவை, முன்கண்டிராத வடிவங்களில் துவக்க விழாவில் காண்பிக்கப்பட்டன. உலகில் சுமார் 400 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்த செறிவான துவக்க விழாவை கண்டுரசித்தனர். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவின் மூலம், சீனாவின் தலைசிறந்த பண்பாடுகள் பன்முகங்களிலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன என்று செய்திஊடங்களும் மக்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.


நண்பர்களே, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் வெளிப்படுத்தப்பட்ட சீன பண்பாடுகளின் ஈர்ப்பு ஆற்றல் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.