• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-01 20:38:37    
பெய்ஜிங் ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத்தொடரோட்டத்தில் கலந்துகொண்டவர் SunHaifeng

cri
Huhehaote நகரின் kangfu செயற்கை உடல் உறுப்புத் தொழில் நிறுவனத்தின் தலைவர், உள் மங்கோலிய ஊனமுற்றோர் அன்பு கலைக் குழுவின் தலைவர், உள் மங்கோலிய அன்பு செய்தி ஏட்டின் தலைவர், நகரின் கை-கால் ஊனமுற்றோர் சங்கத்தின் தலைவர் ஆகிய பதவிகளை sunhaifeng வகிக்கிறார். ஊனமுற்ற அவரை சந்திக்கும் போது, அவரின் மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் மக்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு, 2 ஆயிரத்து 400 யுவானைப் பயன்படுத்தி, செயற்கை உடல் உறுப்புத் தயாரிப்பு தொழில் நிறுவனத்தை அவர் உருவாக்கினார். கடந்த 20 ஆண்டுகளில், ஊனமுற்றோரின் இலட்சியத்தில் அவர் இடைவிடாமல் ஈடுபட்டு வருகிறார்.

1988ம் ஆண்டு துவக்கத்தின் போது, 2 ஆயிரத்து 400 யுவானை திரட்டி, Huhehaote நகரின் kangfu செயற்கை உடல் உறுப்புத் தயாரிப்புத் தொழில் நிறுவனத்தை அவர் கட்டியமைத்தார்.

அப்பொழுது, செயற்கை உடல் உறுப்புத் தயாரிப்புத் தொழில் துறை பற்றி அவர் முழுமையாக தெரிந்திருக்கவில்லை. தவிர, நிதிப் பற்றாக்குறை, சாதாரணமான சாதனங்கள், பலவீனமான தொழில் நுட்பம், விற்பனை ஆகிய பிரச்சினைகளுக்கு அவர் முகம் கொடுத்தார். அப்போதைய நிலைமையை நினைவு கூர்ந்த போது அவர் கூறியதாவது:

1988ம் ஆண்டின் பிப்ரவரி திங்கள், huhehaote நகரில் kangfu செயற்கை உடல் உறுப்புத் தயாரிப்புத் தொழில் நிறுவனம் நிறுவப்பட்ட போது, 3 திறமைசாலிகளும் 7 ஊனமுற்ற பணியாளர்களும் இங்கு பணி புரிந்தனர். அப்போது, நமது தொழில் நிறுவனத்தின் சாதனங்கள் மிகவும் சாதாரணமானவை. உற்பத்தியின் நிலைமையும் சூழலும் மிகவும் கடினமாக இருந்தன. ஆனால், நாங்கள் கடினமான விடயங்களை பொருட்படுத்தாமல், செயற்கை உடல் உறுப்புக்களை உற்பத்தி செய்து வந்தோம் என்றார் அவர்.

இந்தத் தொழில் நிறுவனம் நிறுவப்பட்ட முதல் சில திங்கள்காலத்தில், இந்த தொழில் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டது. ஆனால், அவர் சிக்கல்களைச் சமாளித்து, தொழில் நுட்பத்தை நாடி, உதவிகளை கேட்டு, விற்பனையை மேம்படுத்தினார். பல ஆண்டுகால முயற்சிகளுக்கு பின், இந்தத் தொழில் நிறுவனத்தில் புதிய சாதனங்கள் மற்றும் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பிட்ட சமூக பயன்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து, அவர் கூறியதாவது:

எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. சிக்கல்களைச் சமாளித்து, நான் இலட்சியத்தில் தடையின்றி ஈடுபட்டு வருகிறேன் என்றார் அவர்.

ஆனால், தற்போதைய நிலைமை குறித்து அவர் மன நிறைவு அடையவில்லை. இந்த செயற்கை உடல் உறுப்புத் தயாரிப்பு தொழில் நிறுவனத்தின் குறைந்த அலுவல்களின் மூலம், ஊனமுற்றவர்களுக்குச் சேவை வழங்கும் இலட்சியம் தொடர்ந்து வளர்வது கடினம் என்று அவர் புரிந்துகொணடுள்ளார். ஊனமுற்றவர்களில் ஒருவராக காலூன்றி நின்று, சமூகத்துக்கு சேவை வழங்கும் பாதையில் அவர் நடைபோட வேண்டும். எனவே, ஊனமுற்றோரின் வாழ்க்கை சிக்கல்களை தீர்க்கும் வகையில், ஊனமுற்றோர் அன்பு கலைக் குழு மற்றும் ஊனமுற்றோருக்கான செய்தியேட்டை அவர் உருவாக்கினார். தவிர, ஊனமுற்றோர் மீது மிகுந்த கவனம் செலுத்தி, ஊனமுற்றோரின் இலட்சியத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறியதாவது:  

மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மதிப்பு அளித்து, புத்தாக்க எழுச்சியோடு, பணி புரிய பாடுபட வேண்டும். ஊனமுற்றோருக்கு சேவை புரிய, அவர்கள் ஆதரவாக நிற்க முடியும் என்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் கூறினார்.

ஊனமுற்றோர் இலட்சியத்தை வளர்ப்பது, பிற இலட்சியத்தை விட சிரமம். ஒவ்வொரு முறையும், Sunhaifeng தொடர்புடைய பணியில், பொது மக்களை விட மேலதிகமான முயற்சி செய்ய வேண்டியிருக்கிறார். ஊனமுற்றோர் இலட்சியம் வளர்ச்சியடைந்த போதிலும், தனது முயற்சிகளை அவர் நிறுத்திவிடவில்லை. அடுத்த நோக்கத்திற்காக அவர் முயற்சி செய்யத் துவங்கினார். அவர் கூறியதாவது:

மேலதிகமான ஊனமுற்றவர்களுக்கு நான் தொண்டு புரிய வேண்டும். ஒரு புறம், அரசாங்கத்தின் பணிக்கு எனது முயற்சி துணை புரியும். மறு புறம், ஊனமுற்றவர்களின் தேவைகளை தீர்க்க முடியும். ஊனமுற்றோருக்கு உதவி செய்வது மட்டுமல்ல, சொந்த குறிக்கோள்களையும் அவர்கள் நனவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

சொந்த குறிக்கோள்களை ஓய்வின்றி நாடுகிறார் என்ற வாக்கியத்தோடு, sunhaifengவிடம் முயற்சியுடன் போராடுகிறார். சிக்கல்களை எதிர்நோக்கும் போது, sunhaifeng துணிவுடன் அவற்றைச் சமாளிக்கப் பாடுபட்டு வருகிறார்.