• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-01 10:14:10    
என் மனதிலான பெய்சிங் ஒலிம்பிக் விளயைட்டுப் போட்டி 1

cri
பெய்சிங்கின் Zhong Guan Cun பிரதேசத்தில் இந்திய உணவகம் ஒன்று உள்ளது. இது முழுவதும் இந்திய தனிச்சிறப்பு மிக்க உணவகமாகும். சுவரில் இந்திய ஓவியங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. பயன்படுத்தப்படும் அனைத்து கரண்டிகளும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை. உணவகத்தில் உள்ள நுழைவாயின் அருகிலுள்ள அவரில் பல்வகை இந்திய சிலைகள் அமைந்த சிற்பம் செதுக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய-சீன தேசிய கொடிகள் இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்பை அடையாளப்படுத்தும் விதமாக உள்ளன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், உணவகத்தின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு வருகின்றன. இதன் உரிமையாளர் Kamat, எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவது இந்த இந்திய உணவகத்திற்கு பல நன்மைகளை வழங்கியுள்ளது என்று Kamat கருத்து தெரிவித்தார். சீனா பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஆயத்தம் செய்தபோது தான், இந்த உணவகம் துவங்கியது. எனவே, இது பல நன்மைகளைப் பெற்றுள்ளது. 3 வாரங்களுக்கு முன், பெய்சிங் சுரங்க இருப்புப்பாதையின் 10வது நெறி செயல்பட துவங்கியது. தற்போது, சுரங்க இருப்புப்பாதை நிலையத்திலிருந்து இந்திய உணவகத்திற்கு செல்வதற்கு சுமார் 5 நிமிடமே தேவைப்படுகினஅறது என்று அவர் கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முன், போக்குவரத்து பிரச்சினையால், விருந்தினர்கள் அங்கே வருவதற்கு, 3 மணி நேரம் வரை, செலவழிக்க வேண்டும். சுரங்க இருப்புப்பாதையின் 10வது நெறி செயல்பட துவங்கிய பின், பலர் அங்கே வந்து, சாப்பிடுகின்றனர் என்றார் அவர்.

அவர் சீனாவுக்கு வந்த 2 ஆண்டுகளில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பெய்சிங் ஆயத்தம் மேற்கொண்டு வருகின்றது. புதிய போக்குவரத்து நெறி நமது மனங்களில் ஆழமாக பதிந்துள்ளது. அத்துடன், பெய்சிங்கில் புதிய மாற்றம் நாள்தோறும் ஏற்பட்டுள்ளது என்று Kamat கூறினார்.
சுமார் ஒவ்வொரு 15 நாளுக்கு, ஒரு புதிய கட்டிடம் பெய்சிங்கில் கட்டி முடிக்கப்பட்ட அளவில் கட்டிடப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல குடியிருப்புகளில் பல்வகை மலர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. சீனாவில் வாழ்வது மிகவும் இன்பமானது என்றார் அவர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நுழைவுச் சீட்டுகளை வாங்காத போதிலும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவுக்கு முன், Kamat பறவைக் கூடு தேசிய விளையாட்டரங்கையும் ஒலிம்பிக் கிராமத்தையும் பார்வையிட்டுள்ளார்.

நான் பறவைக்கூட்டிற்கும் ஒலிம்பிக் கிராமத்திற்கும் சென்றுள்ளோன். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதை நான் பார்ப்பது இதுவே முதன் முறையாகும் என்றார் அவர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவுக்கு பின், வெளிநாட்டு நண்பர்கள் பலர் பெய்சிங்கிற்கு வந்தனர். எனவே, இந்த உணவகத்திற்கு வருகின்ற வாடிக்கையாளரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கின்றது. குறிப்பாக, துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர் Bindra தங்கப் பதக்கம் பெற்றவுடன், உணவகத்திலிருந்த அனைத்து வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியடைந்து, இந்திய உணவக உரிமையாளருக்கு உளமார்ந்த வாழ்த்து தெரிவித்தனர். இந்திய பிரதிநிதிக் குழு முதல் தங்கப் பதக்கம் பெற்ற நாளில், Kamat இந்திய உணவு வகைகளை மிகவும் சிற்ப்பாக தயாரித்திருந்தார்.