• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-02 10:41:22    
விளக்கு ஏற்றும் புத்தர் கோபுரம்

cri

பெய்ஜிங்கின் தோங் ச்சோ பிரதேசத்தில், பெய்ஜிங்-ஹாங் ச்சோ கால்வாயின் வடக்குப் பகுதியில், ஒரு புகழ்பெற்ற புத்தர் கோபுரம் இருக்கிறது. அது விளக்கு ஏற்றும் புத்தர் கோபுரம் என அழைக்கப்படுகிறது.

விளக்கு ஏற்றும் புத்தர், சாக்கியமுனியின் ஆசிரியர் ஆவார். அவர் பிறந்த போது, உடலுக்கு அருகில் பிரகாசமான, விளக்கை ஏற்றப்பட்டிருந்தது போன்ற காட்சி இருந்தது. எனவே இவ்வாறு விளக்கு ஏற்ரப்படுகிறது என்று செவிவழி கதைகள் கூறுகிறன. அதனால், இது விளக்கு ஏற்றும் புத்தர் கோபுரம் என அழைக்கப்படுகின்றது.

அவர் இறந்த பின், அவரது உடலை தகனஞ் செய்யும் போது, பூதவுடலில் இருந்த முத்து போன்ற பொருள், விளக்கு ஏற்றப்படும் புத்தர் கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்புத்தர் கோபுரம், 577ம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டது. பின்னர், பல முறை செப்பணிடப்பட்டுள்ளது.

அப்புத்தர் கோபுரம், 13 மாடிகளைக் கொண்ட உறுதியான தூபியாகும். அதன் உயரம், 56 மீட்டராகும். அடித்தளத்தின் சுற்றளவு, 38.4 மீட்டராகும். இது பெய்ஜிங்கில் உள்ள மிக உயரமான, பெரிய தூபியாகும். அதில், புத்தக் கதைகள் செதுக்கப்பட்டிருக்கு சில கற் துண்கள் காணப்படுகின்றன.