• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-02 09:37:42    
நேயர்களின் கருத்துக்கள்

cri

க்ளீட்டஸ்: இசை நிகழ்ச்சி குறித்து திருச்சி மணக்கால் இரா. அன்பழகன் எழுதிய கடிதம். கருவறை முதல் கல்லறை வரை மனிதனுக்கு வாழ்க்கையில் சில்லறை தேவை. இசையும் அப்படித்தான். மொழி புரியாதபோதும், சீனத்து இசையின் நளினமும், லயமும் கேட்க இனிமையாகவும், மனதிற்கு இதமாகவும் அமைகிறது. பாடலுக்கு முன்பாக விளக்கமளிப்பது பயன் தருகிறது.
கலை: இலங்கை ஆரையம்பதி எம். எஃப். எஃப். ஹுஸ்னா எழுதிய கடிதம். கடந்த ஓராண்டாக சீன வானொலியை கேட்டு வருகிறேன். சீன வரலாற்றுச்சுவடுகள், அறிவியல் உலகம் போன்றவை மாணவர்களுக்கு பயனுள்ளதாய் அமைகின்றன. இசை நிகழ்ச்சியும், நேயர் விருப்பம் நிகழ்ச்சியும் எனக்கு பிடித்தமானவை.
க்ளீட்டஸ்: அடுத்து நட்புப்பாலம் நிகழ்ச்சி பற்றி திருவாணைக்காவல் ஜி. சக்ரபாணி எழுதிய கடிதம். பேராசிரியர் சாரதா அம்மையார், தமிழ் மொழியை சீனாவிற்கு, சீன வானொலி அறிவிப்பாளர்களுக்கு கொண்டு வந்தது பற்றி விபரமாக அறிந்துகொண்டோம். 80 வயதான சாரதா அம்மையார் 48 ஆண்டுகள் சீனாவில் வாழ்ந்தவர், 1960 ஆம் ஆண்டில் பள்ளி துவங்கியது என பல தகவல்களை அறிந்துகொண்டோம்.
கலை: நாமகிரிப்பேட்டை கவித்துளி சக்தீஸ்வரன் எழுதிய கடிதம். சீனக்கதை நிகழ்ச்சியில் வெள்ளோடை மங்கை, நம்பிக்கையான் நாய் ஆகிய கதைகள் சிறப்பாக இருந்தன. விசிறிகள் பற்றிய பண்பாடு நிகழ்ச்சி வியப்படைய வைத்தது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே விசிறிகள் சீனாவில் இருந்ததையும், பறவைகளின் இறகுகளில் விசிறிகள் செய்யப்பட்டதையும் கேட்டபோது சீன நாட்டின் செழுமையான பண்பாட்டை அறிய முடிந்தது.


க்ளீட்டஸ்: சீனத் தமிழொலி இதழ் பற்றி வெண்ணந்தூர் எஸ். சுப்ரமணி எழுதிய கடிதம். சீனத் தமிழொலி இதழில் பாண்டிச்சேரி பாலகுமாரின் பயண அனுபவங்களை அவரது மீளாய்வு கட்டுரையின் தெரிந்துகொண்டோம். கட்டுரையை வாசித்தபோது அவரோடு இணைந்து சீனாவில் பயணம் மேற்கொண்டது போல் இருந்தது.
கலை: இலங்கை வாழைச்சேனை மயில்வாகனம் சரண்யா எழுதிய கடிதம். பள்ளி மாணவியான நான் உங்களது நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டு வருகிறேன். எனது பள்ளியை நேசிப்பதை போலவே சீன வானொலியையும் நேசிக்கிறேன்.
இப்படி தொடங்கி நீண்ட ஒரு கடிதத்தை 13 வயது சிறுமி சரண்யா எழுதி அனுப்பியிருக்கிறார். ஒரு தோழியிடம் பேசுவது போல் கடிதத்தில் எழுத்துக்களால தன் உணர்வுகளை வெளிப்படித்திய சரண்யாவுக்கு நன்றிகள். அன்பு சரண்யா, தொடர்ந்து நன்றாக படித்து, சதுரங்க விளையாட்டிலும், நடனத்திலும் தேர்ச்சி பெற்று, உனது பெற்றோருக்கு பெருமை தேடித்தர வாழ்த்துகிறோம்.
க்ளீட்டஸ்: உத்திரக்குடி சு. கலைவாணன் ராதிகா எழுதிய கடிதம். நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில், சிறு நீரக நோய் பற்றி பல விழிப்புணர்வுத் தகவல்களை வாணி வழங்கினார். ஆண்டுதோறும் உடற்பரிசோதனை செய்யவேண்டும், அதிகம் தண்ணீர் குடிக்கவேண்டும் என்பன போன்ற தகவல்களை மனதில் பதிய வைத்துக்கொண்டோம். நன்றி.