• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-02 09:44:27    
இன்னொரு சுவையான உணவு வகை

cri
வாணி – இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் தங்களுக்கு இன்னொரு சுவையான உணவு வகை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
க்ளீட்டஸ் – வணக்கம், நண்பர்களே. வாணி, இன்று தயாரிக்கப்படும் உணவு வகை பற்றி நீங்கள் அறிமுகப்படுத்துங்கள்.
வாணி – சரி. இன்று தயாரிக்கப்படும் உணவு வகையின் சீனப் பெயர் tu dou jian bing. உண்மையில், இது கொரிய இன மக்கள் அடிக்கடி தயாரிக்கும் ஒரு உணவு வகையாகும்.

 

க்ளீட்டஸ் – அப்படியா. கொரிய இனம் சீனாவின் 56 தேசிய இனங்களில் ஒன்றாகும்.
வாணி – ஆமாம். கொரிய இனத்தோர் சீனாவின் வடகிழக்குப் பகுதியில் வசிக்கின்றனர். இன்று தயாரிக்கப்படும் உணவு வகை உருளைக்கிழங்கு பஜ்ஜி என்றும் அழைக்கலாம். ஏனென்றால், உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படும்.
க்ளீட்டஸ் – சரி, இறைச்சி ஒன்றும் இல்லாத இந்த உணவு வகையின் தயாரிப்பு முறையும் எளிதானது. நேயர்களே, வீட்டில் தயாரித்து ருசிபாருங்கள். வாணி, இதற்குத் தேவையான பொருட்களை முதலில் கூறுங்களேன்.
வாணி – நான் கூறுகின்றேன்.

சுமார் 300 கிராம் கொண்ட உருளைக்கிழங்கு 2 தேவை.
முட்டை ஒன்று
பால் 80 மில்லி லிட்டர்
வெங்காயத்தழை 15 கிராம்


சர்க்கரை ஒரு தேக்கரண்டி
உப்பு ஒரு தேக்கரண்டி
கோதுமை மாவு 50 கிராம்
சமையல் எண்ணெய் ஒரு தேக்கரண்டி

 

வாணி – முதலில், உருளைக்கிழங்குகளைச் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, இவற்றை நன்றாக வேகவைத்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடங்களுக்குப் பின், அவை அவ்வளவு வெப்பமாக இல்லாத போது, அவற்றின் தோலை நீக்கவும்.
க்ளீட்டஸ் – தோலில்லாத உருளைக்கிழங்குகளை பாத்திரத்தில் வைக்கவும். ஒரு பெரிய தேக்கரண்டி மூலம், அவற்றை மாவாக நசித்துக்கொள்ளவும்.
வாணி – வேறு ஒரு பாத்திரத்தில், முட்டையை உடைத்து நன்றாக கலத்து உருளைக்கிழங்கு மாவில் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு, இதில் பாலை ஊற்றவும். சர்க்கரை, உப்பு, கோதுமை மாவு ஆகியவற்றை இதில் கொட்டலாம். ஒரே திசையில் சுழற்றி, நன்றாக கலக்கவும்.

க்ளீட்டஸ் – இறுதியில், மாவாக்கப்பட்ட உருளைக்கிழங்கை இதில் சேர்க்கலாம். இந்த கலைப்பை சிறிய துண்டு துண்டாக எடுத்து, சிறிய சப்பாத்தி போல் தயாரிக்கவும்.
வாணி – ஒரு தட்டையான வாணிலியை அடுப்பின் மீது வைத்து, சமையல் எண்ணெயை ஊற்றவும். 10 வினாடிக்குப் பின், உருளைக்கிழங்கு சப்பாத்திகளை தனித்தனியாக இதில் போடலாம். அவற்றில் மீது நறுக்கப்பட்ட வெங்காயத் தழைகளை வைக்கலாம். சுமார் 2 நிமிட நேரம் வறுக்கவும். பிறகு, மறு பக்கத்துக்கு மாற்றி மேலும் 2 நிமிடம் வறுக்கவும்.
க்ளீட்டஸ் – இரு பக்கங்களும் பொன் நிறமாக மாறிய பின், இன்றைய உருளைக்கிழங்கு பஜ்ஜி தயார்.

வாணி – என்ன, நேயர்களே, இன்றைய உருளைக்கிழங்கு பஜ்ஜியின் தயாரிப்பு முறை மிகவும் எளிதானது, அல்லவா?
க்ளீட்டஸ் – வசதி இருந்தால், நீங்கள், இந்த உணவு வகை தயாரிப்பதில், கேரட் போன்ற இதர கிழங்குகளை சேர்க்கலாம். தனிச்சிறப்பு வாய்ந்த பஜ்ஜிகளைத் தயாரிக்கலாம்.
வாணி – சீன உணவுப் பண்பாடு பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்துவதும், சொந்தமாக வீட்டில் சுவையான சீன உணவு வகைகளைத் தயாரிப்பது பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியின் நோக்கமாகும்.