• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-02 19:37:17    
உயர் மதிப்பு பெற்றுள்ள ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமம்

cri

பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கின்ற வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கியிருக்கும் இடமான பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமம் போட்டிகள் நடைபெறும் போது 148 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 7000க்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களை உபசரிக்கும். ஆகஸ்ட் 30ம் நாள் அதிகாரப்பூர்வமாக செயல்பட துவங்கிய அக்கிராமத்தில் காணப்படும் மானிட அன்புக்கு வீரர்களும் விருந்தினர்களும் உயர்வான மதிப்பு அளித்துள்ளனர். கிராமத்தில் மொத்தம் 42 கட்டிடங்கள் உள்ளன. ஊனமுற்றோர்களின் வாழ்க்கைக்கு அதிக வசதி வழங்கும் வகையில் கட்டிடத்தின் முதல் 3 மாடிகளிலுள்ள அறைகள் மட்டும் பயன்படுத்தப்படுகின்றன. மின் தூக்கியின் வாயில் அகலமானது. சக்கர நாற்காலி இதில் நுழையவும் வெளியேறவும் மிகவும் வசதியாக உள்ளது. மின் தூக்கியிலுள்ள மாடி அறிவிப்பு பொத்தானில் கண்பார்வையற்றோர் பயன்படுத்தும் சிறப்புப் பொத்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாடியிலும் சீன மற்றும் ஆங்கில மொழியில் நினைவூட்டுகின்ற அறிவிப்பு வசதி இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே கண்பார்வையற்ற வீரர்கள் இவ்வித வசதிகளின் உதவியுடன் தாராளமாக சரியான மாடியில் நுழைந்து வெளியேறலாம். அறையில் போடப்பட்டுள்ள மின்சார கட்டுப்பாட்டு பகுதிகளும் அறை கதவின் கைப்பிடிகளும் தாழ்ந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. குளியலறையில் குறிப்பாக நாற்காலி உள்ளது. குளிப்பதற்கான நீர் வரும் குழாய் உயர்வாகவும் தாழ்ந்தவாகவும் செயல்படும் முறையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அருமையான மானிட அக்கறையை கண்டு ஸ்லோவேனிய வட்டு எறிதல் வீரர் ஜோசே பிஃலெரி உயர்வாக மதிப்பிட்டார். அவர் கூறியதாவது.

ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமத்தின் சேவை மிகவும் சிறப்பானது. இங்கே சேவை தரம் 5 நட்சத்திர நிலையை எட்டியுள்ளது. நீங்கள் இங்கே வரா விட்டால் மிகவும் வருந்த போவது உறுதி என்றார் அவர். உணவுச் சேவைத் துறையில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது மேற்கொள்ளப்பட்ட கண்டிப்பான உணவுப் பொருள் பாதுகாப்பு அமைப்பு முறையை தொடர்ந்து நடைமுறைபடுத்துவது தவிர, வீரர்கள் உணவு உட்கொள்ளும் முக்கிய மண்டபத்தில் சக்கர நாற்காலிகளை வைப்பதற்காக 700 சதுர மீட்டர் பரப்பு கொண்ட இடம் ஒதுக்கி வைக்கப்படுகின்றது. உணவு மேசை இடைவெளி அகலமானது. உணவுப் பொருட்களை எடுத்து கொள்ளும் மேசையின் உயர்வும் தாழ்ந்ததாக மாற்றப்படுகின்றது. மேசை சரிவாக மாற்றப்படுகின்றது. 24 மணி நேரமும் விளையாட்டு வீரர்கள் உணவகத்தில் உணவு உட்கொள்ள முடியும். உணவு வகை பட்டியல் 8 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படும். சக்கர நாற்காலியில் உட்கார்ந்த உக்ரேன் கூடை பந்து விளையாட்டு வீரர் நாஸ்தியா திமொலங்கோ அங்குள்ள உணவுப் பொருட்களையும் சேவை முறையையும் மிகவும் விரும்புகிறார். அது பற்றி அவர் கூறியதாவது.

இங்கே காய்கறி வகைகள் மிக அதிகமானவை. சீன பாணியும் மேலை நாட்டு பாணியும் கொண்ட உணவுப் பொருட்கள் மிக சுவையானவை. ஷாரா, பீங்கிங் வாத்து, தக்காளி சூப் ஆகியவை நான் உட்கொள்ள விரும்பும் உணவு வகைகளாகும் என்றார் அவர். ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமத்தில் வாழ்க்கை வசதி தவிரவும் வீரர்களின் வாழ்க்கை உதவிக் கருவிகளில் ஏற்படும் பிரச்சினைகளை நீக்கும் வகையில் பொய் கால் மற்றும் கை கருவிகளை பழுதுபார்க்கும் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 19 நாடுகளின் 150 சிறப்பு தொழில் நுட்ப வல்லுனர்கள் விளையாட்டு வீரர்களின் பொய் கால்களை பழுதுபார்க்கும் சேவையை அங்கே செய்கின்றனர். இந்த சேவை இலவசமாகும் கிராமத்தில் அமைந்துள்ள அஞ்சல் நிலையம், பல்பொருள் அங்காடி, நினைவு பொருட்கள் விற்பனை சிறப்பு கடை ஆகியவற்றின் முன்னால் படிகள் இன்றி சரிவாக மாற்றி பொறுத்தப்பட்டுள்ளன. கடையில் நினைவுப் பொருட்களை தேர்வு செய்கின்ற ல்த்துவேனிய தடகள விளையாட்டு வீராங்கனை கராஸ்னோவா இது பற்றி கூறியதாவது.

இங்குள்ள அனைத்தும் மிகவும் வசதியானவை. மிகவும் சுகமானவை. அமைப்பு குழு விளையாட்டு வீரர்களுக்கு தேவையானவற்றை முன்நிறுத்தி கருத்தில் கொண்டிருப்பது மிகவும் சிறப்பானது என்றார் அவர். ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்களுக்கு சேவை புரியும் பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர். ஊனமுற்ற வீரர்கள் பயன்படுத்தும் கருவிகளின் தொழில் நுட்பத்தையும் சைகை மொழியையும் அவர்கள் தாராளமாக கற்றுக் கொண்டு பயன்படுத்துகின்றனர். குறுகிய நாட்களில் பல விளையாட்டு வீரர்களும் விருந்தினர்களும் இப்பணியார்களுடன் நண்பராகியுள்ளனர்.