• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-03 12:19:34    
Zha Lan Tun நகரில் உள்ள விவசாயிகள் கூட்டுறவு சங்கம்

cri
சீனாவின் கிராமப்புற சமூகப் பொருளாதார வளர்ச்சியில், புதுவகை சோஷலிச கிராமப்புறங்களின் உருவாக்கம், ஓரளவு வசதியான சமூகத்தை உருவாக்கும் குறிக்கோளை நனவாக்குவதில் முக்கிய நடவடிக்கையாகும். புதுவகை கிராமப்புறங்களின் உருவாக்கத்துடன், வட சீனாவின் உள் மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தின் Zha Lan Tun நகரில், விவசாயிகளுக்கு ஆதரவு மற்றும் நன்மை அளிக்கும் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பல்வகை விவசாய கூட்டுறவுச் சங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுவப்பட்டுள்ளன.

பயிரிடுதல் மற்றும் வளர்ப்புத் தொழில்களின் வளங்களை அறிவியல் முறையில் பயன்படுத்தும் பொருட்டு, கடந்த ஆண்டின் டிசம்பர் திங்கள் Zha Lan Tun நகரின் Cheng Ji Si Han வட்டத்தின் Ya Er Gen Chuவில் உள்ள Wu Dao Gou கிராமத்தில் விவசாய கூட்டுறவுச் சங்கம் நிறுவப்பட்டது. Wu Dao Gou கிராமத்தில், 315 விவசாய குடும்பங்களைச் சேர்ந்த 1326 கிராமவாசிகள் இருக்கின்றனர். விளை நிலங்களின் பரப்பளவு, சுமார் 537 ஹெக்டர் ஆகும். இக்கிராமத்தின் முக்கிய தொழில் பயிரிடுதலாகும். பயிர் செய்கை மூல வருமானம், ஆண்டு நபர்வாரி வருமானத்தில் சுமார் 85 விழுக்காடு ஆகும். வேளாண் பொருட்கள் விளைச்சல் தாழ்வு. நபர்வாரி விளை நிலப்பரப்பளவு குறைவு. ஆண்டுதோறும் வேளாண் உழைப்பு தேவையற்ற காலத்தில், சுமார் 500 பேர் வெளியூருக்கு சென்று வேலை செய்கின்றனர்.

விவசாய கூட்டுறவுச் சங்கத்தை நிறுவுவது பற்றி Ya Er Gen Chu பணியகத்தின் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டிச் செயலாளர் Yang Xiang Kun செய்தியாளரிடம் கூறியதாவது:

"விவசாயக் குடும்பங்கள் தனித்தனியாக பயிர் செய்தலில் ஈடுபடுவதால் பல குறைபாடுகள் நிலவுகின்றன. முதலாவது, தனித்தனியாக இப்படி பயிர் செய்வதால் செலவு உயர்வாக இருக்கிறது. இரண்டாவது, விளைச்சல் மற்றும் பயன் குறைவு. மூன்றாவது, நிலங்களின் நியாயமான பயன்பாட்டுக்கும், நீர் சேமிப்பு வசதிகளின் கட்டுமானத்துக்கும் சாதகமற்றது. விவசாயிகளுக்கும், சந்தை, தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்குமிடை இணைப்புக்கு சாதகமற்றது. விவசாயிகள் பிற தொழில்களில் ஈடுபடுவதற்கு சாதகமற்றது." என்றார், அவர்.

Ya Er Gen Chu பணியகத்தின் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டியும் அரசும் விவசாய கூட்டுறவுச் சங்கத்துக்கு அளிக்கும் ஆதரவு பற்றி Yang Xiang Kun கூறியதாவது:

"2007ஆம் ஆண்டின் செப்டம்பர் திங்கள் முதல், இச்சங்கத்தில் சேருமாறு விவசாயிகளை அணிதிரட்டினோம். விவசாயிகள் தனித்தனியாக பயிர் செய்வதன் குறைபாடுகளைப் புரிந்து கொள்வதற்கு துணை புரியும் பொருட்டு, அவர்களின் குடும்பங்களுக்கு சென்று, பிரச்சாரம் செய்தோம். கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்ட போக்கில், கூட்டுறவுச் சங்கத்தின் விதிகள், அமைப்பு முறை மற்றும் உடன்படிக்கையின் மேம்பாடு ஆகியவற்றுக்கு வழிகாட்டினோம். கூட்டுறவுச் சங்கம் உருவாக்கப்பட்ட பின், இச்சங்கத்தின் இயங்கலை, கட்சி கமிட்டியின் முதன்மைப் பணியாக கொள்கின்றோம். கூட்டுறவுச் சங்கத்தின் நிதிப் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க, தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, கூட்டுறவுச் சங்கத்தின் பயிர் செய்கை தொழில் மூல வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கின்றோம். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு, விவசாயிகள் வெளியூரில் வேலை செய்வதற்கும், இதர தொழில்களில் ஈடுபடுவதற்கும் ஏற்பாடு செய்கின்றோம்" என்றார், அவர்.

உடன்படிக்கையின் படி, ஆண்டுதோறும் 80 விழுக்காட்டு நிகர லாபம், சங்கத்தின் உறுப்பினர்களிடையே பங்கீடு செய்யப்படுகின்றது. 20 விழுக்காட்டு லாபம், கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதியாக பயன்படுத்தப்படுகின்றது. தற்போது, சங்கத்தின் விளை நிலப்பரப்பு சுமார் 467 ஹெக்டரை எட்டியுள்ளது. இது மொத்த விளை நிலங்களில் 87.1 விழுக்காடாகும்.

கூட்டுறவுச் சங்கத்தில் சேர்ந்த பின் தமது குடும்பத்தின் மாற்றம் பற்றி கிராமவாசி Xu Hai Nian செய்தியாளரிடம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

"கூட்டுறவுச் சங்கத்தில் சேர்ந்த பின், விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக, எனது குடும்பத்தில் முன்பு விளை நிலங்களில் பயிர் செய்வதன் மூலம், ஆண்டுக்கு 10 ஆயிரம் யுவானை ஈட்டினோம். ஆனால், விளை நிலங்களை சங்கத்துக்கு வழங்கிய பின், பயிரிடாமல் இருந்தாலும், லாபம் பெறலாம். குடும்பத்தின் உழைப்பு ஆற்றல் வாய்ந்த எஞ்சிய நபர்கள், இரண்டாவது தொழிலில் ஈடுபடலாம். எடுத்துக்காட்டாக மாடுகள் மற்றும் பன்றிகளை வளர்க்கலாம். இது குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்க உதவும். தற்போது, 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் யுவான் வரை எங்களால் ஈட்ட முடியும்" என்றார், அவர்.

கூட்டுறவுச் சங்கத்தில் சேராத விவசாயி ஒருவர் கூறியதாவது:

"சீனாவில் உள்ள வளர்ந்த இடங்களில் நடைமுறைக்கு வந்துள்ள கூட்டுறவுச் சங்க முறை, நல்ல முன் மாதிரியாக திகழ்கின்றது. இவ்விடத்தில் கூட்டுறவுச் சங்கத்தை நிறுவுவது, பொது மக்களின் விருப்பம். சங்கத்தில் சேர்ந்த பின், உழைப்பு ஆற்றல் வாய்ந்தோர், விளை நிலங்கள் முதலியவை முழுமையாக பயன்படுத்தப்படலாம். ஓய்வு நாட்களில், மக்கள் வெளியூருக்கு சென்று வேலை செய்து, வணிகம் செய்து, கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபடலாம். இது, பொது மக்களுக்கு நலன் தருகின்றது" என்றார். எதிர்காலத்தில் இச்சங்கத்தில் சேர வேண்டும் என்று அவர் விரும்புகின்றார்.

கூட்டுறவுச் சங்கம் நிறுவப்பட்ட பின், வட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி Yang Xiang Kun கூறியதாவது:

"கூட்டுறவுச் சங்கம் நிறுவப்பட்ட பின், அரசின் பணி, முந்தைய நிர்வாகப் பணியிலிருந்து சேவைப் பணிக்கு திரும்பியுள்ளது என்று உணர்ந்து கொள்கின்றோம். சேவை ரக அரசு, சிறந்த தோற்றத்தை நிலைநாட்டியுள்ளது" என்றார், அவர்.

Wu Dao Gou கிராமத்தின் கட்சி கமிட்டிச் செயலாளர் Zhang Feng Ming பேசுகையில், இது வரை, 280 விவசாய குடும்பங்கள் இச்சங்கத்தில் சேர்ந்துள்ளன என்றும், மொத்த விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கையில் இது 90 விழுக்காடு வகிக்கின்றது என்றும் கூறினார்.

தற்போது, சீனப் பாரம்பரிய மருந்துகளுக்கான மூலிகைகளை பயிரிடுதல், எரிசாராய உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சோளத்தட்டு பயிரிடுதல் பற்றி கூட்டுறவு சங்கம், An Hui, Shan Dong முதலிய இடங்களின் தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. வேளாண் துறை மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையின் தொழில்மயமாக்க அலுவலை விரைவுபடுத்துவதில் கூட்டுறவுச் சங்கத்தின் மேம்பாடு அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தரமிக்க வேளாண் மற்றும் உற்பத்தி பொருட்கள் தளத்தைக் கட்டியமைத்து, பொருட்களின் தரத்தை உயர்த்தி, புதிய ரக சிறப்புமிக்க தலைமை தொழிலை உருவாக்குவதற்கு கூட்டுறவுச் சங்கம் இன்றியமையாத பங்காற்றி, புதுவகை சோஷலிச கிராமப்புறங்களின் உருவாக்கத்தை விரைவுபடுத்தியுள்ளது.