கோடரியின் பிடியை செதுக்குவது
cri
சீன மொழியில் fa ke என்றால் கோடரியின் பிடியை செதுக்குவது என்று பொருள். இந்த மரபுத்தொடர் பாடல்களின் திரட்டு என்ற புத்தகத்தில், பின்பின் பாடல்களில் இடம்பெறுகிறது. கோடரியின் பிடியை எப்படி செதுக்கமுடியும்? அதற்கும் ஒரு கோடரி வேண்டும் அல்லவா. மற்றொரு கோடரி இல்லாமல் கோடரிக்கு கைப்பிடியை மரத்திலிருந்து வெட்டி, சீவி, செதுக்க இயலாது. அவ்வண்ணமே திருமணமுடிக்க, திருமணத் தரகர் என்று நாம் பொதுவாகக் குறிப்பிடும், இணைகளை சேர்த்து வைக்கும் சேவையில் உள்ளவர் இல்லாமல் திருமணத்திற்கு பெண் தேடுவது கடினம். ஆக இந்த உருவகத்தின் அடிப்படையில் திருமணத் தரகு தொழிலை கோடரியின் பிடியை செதுக்குவது fa ke என்று சீனர்கள் குறிப்பிட்டனர்.
|
|