2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் மிக முக்கியத்துவ வாய்ந்ததாக பொறிக்கப்பட்டுள்ளது. உயர்வான ஏற்பாட்டுப் பணி, உலக நிலையிலான போட்டி அரங்குகள், முறியடிக்கப்பட்ட பல உலக சாதனைகள், தொலை காட்சி சேவை அனுப்பப்பட்ட அளவு ஆகியவற்றின் மூலம் சீனா ஒலிம்பிக் குடும்பத்திற்கு மாபெரும் பங்கு ஆற்றியுள்ளது. போட்டி ஏற்பாடு, போட்டியின் தொழில் நுட்ப நிலை ஆகியவற்றின் மூலம் தனிச்சிறப்பியல்பு மிக்க சீனப் பண்பாடும் ஒலிம்பிக் எழுச்சியை மேலும் செழுமைபடுத்தி வளர்த்துள்ளது. இதுபற்றி சீன மக்கள் பல்கலைக்கழகத்தின் மானிட வள ஒலிம்பிக் ஆய்வு மையத்தின் பேராசிரியர் ஜின் யுவன் பூ கூறியதாவது.
சீனா ஐயாயிரம் ஆண்டு பண்பாட்டை கொண்ட நாடு. இதன் அடிப்படையில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதில் எங்களை பெருமையடையச் செய்துள்ளது என்றார் அவர். மிக பல வெளிநாட்டவர்களை தன்வயப்படுத்திய பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் சீனாவின் 5000 ஆண்டுகால பண்பாடு உலகத்திற்கு வெளிகாட்டப்பட்டுள்ளது. ஓவிய விரிப்பு மெதுவாக திறந்ததுடன் இனிமையான சீனத் தேசத்தின் நாகரிகம் கவிதை நிறைந்த ஓவிய உணர்வை உலகம் முழுவதற்கு காட்டியுள்ளது. தனிச்சிறப்பியல்பு மிக்க கீழை நாட்டின் ஈர்ப்பு ஆற்றலால் உலகம் வியப்படைந்துள்ளது. பிரமாண்டமான துவக்க விழாவில் நவீன சீனாவின் தன்னம்பிக்கை, ஆற்றல், விவேகம் ஆகியவை போதியளவில் காணப்படுகின்றன.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பண்பாட்டு ஈர்ப்பு ஆற்றல் மேலதிகமாக வெளிப்பட்டது. இணக்கம் என்பது சீனாவின் பாரம்பரிய பண்பாட்டின் மையமாகும். பண்டைகாலம் தொட்டு சீன மக்கள் இணக்கத்தை மதிப்புக்குரியதாக கருதி அதை மனித உறவையும் சர்வதேச உறவையும் கையாள்வதற்கு அடிப்படை கோட்பாடாக செயல்படுத்தியுள்ளனர். பல்வேறு வடிவத்தில் நடைமுறையான இணக்க செயல்பாடுகள் துவக்க விழாவில் நவீன ஒலிம்பிக் எழுச்சி மீதான சீன மக்களின் புரிந்துணர்வை விளக்கி கூறியுள்ளது. இதன் மூலம் சமாதானம் நட்பு என்ற மதிப்பீடுகளின் குரல் உலகத்தில் பரவியுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெளிக்கொணரப்பட்டுள்ள கீழை நாட்டு பண்பாடு சீனாவின் தனிச்சிறப்பியல்பான வடிவத்தில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பயன் மிக்க ஈர்ப்பு வழங்கியுள்ளது என்று பேராசிரியர் ஜின் கருத்து தெரிவித்தார். இது பற்றி அவர் கூறியதாவது.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடத்துவதன் மூலம் சீனா இணக்கம், அன்பு, அழகு என்ற மதிப்பீடுகளை முன்வைத்துள்ளது. கீழை நாட்டு இணக்க எழுச்சியை கொண்டு ஒலிம்பிக் எழுச்சியை நிரப்புவது ஒலிம்பிகின் மேலும் உயர்வான விரைவான வலிமையான எழுச்சியை நிரப்பும் செயலாகும் என்றார் அவர்.
அதேவேளையில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மக்கள் அனைவரும் ஒலிம்பிகில் ஈடுப்படும் உடல் நல நிலையை பெற வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெறுவதும் நாட்டின் கௌரவமும் மிகவும் முக்கியமானவை. ஆனால் மேலும் கூடுதலான சாதாரண மக்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதை விட அவை சிறியவை. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற பின்னர் ஒலிம்பிக் விளையாட்டிலுள்ள உயர்வான குறிக்கோள் அதாவது மக்கள் அனைவரும் ஒலிம்பிகில் பங்கெடுப்பது என்பது பரவலாகியுள்ளது. சீன மக்கள் தமது உடல் நலத்துக்கென ஒலிம்பிக் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். இதில் உடல் நலம் உயர்வான மானிட எழுச்சியின் ஆர்வம் என்பன அடங்கும்.
உலகம் எனக்கு 16 நாட்கள் வழங்கியுள்ளது. நான் உலகத்திற்கு 5000 ஆண்டு எழுச்சியை திருப்பி வழங்கியுள்ளேன். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற குறுகிய 16 நாட்களில் சீனா பன்முகங்களிலும் 5000 ஆண்டுகால பண்பாட்டை உலக மக்களுக்கு வெளிகாட்டியுள்ளனது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முழக்கமான ஓர் உலகம் ஒரு கனவு என்பதற்கு இது ஒத்ததாகும்.
|