சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டி, நேற்று பெய்ஜிங்கில் செயற்குழுக் கூட்டத்தை நடத்தியது. பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்தன என்று பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவர் லியு ச்சி இக்கூட்டத்தில் கூறினார்.
தற்போது, ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான 40 ஆயிரத்துக்கு மேலான பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும், வந்து சேர்ந்துள்ளனர். பெய்ஜிங்குடன் இணைந்து ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் ச்சிங்தௌ, ஹாங்காங் முதலிய நகரங்கள், பல்வேறு துறைகளில் முற்றிலும் தயாராக இருக்கின்றன. தவிர, பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு, ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் செய்தி ஊடகங்களுக்கான சேவை மற்றும் செய்தி அறிவிப்புப் பணியை மேலும் செவ்வனே செய்யும். தனிச்சிறப்பு வாய்ந்த, உயர் நிலை ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவது என்ற குறிக்கோளை நிறைவேற்றுவதை உத்தரவாதம் செய்யும் என்று அவர் கூறினார்.
சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Philip Craven, பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பான ஆயத்தப் பணியை உறுதிப்படுத்தினார். பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி, முழுமையாக இருக்கிறது என்று அவர் பாராட்டினார்.
|