• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-04 09:48:16    
விவசாயியா? கண்டுபிடிப்பாளரா?

cri
விவசாயியா? கண்டுபிடிப்பாளரா?

விதையூன்றும் இடத்தில் பூத்துக்குலுங்கு என்பர். நாம் பிறக்கும் அல்லது வளரும் இடங்களில் பல்வேறு தடைகள் இருந்தாலும் அவ்விடத்தில் நன்றாக ஊன்றி, வளர்ந்து சாதனை படைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அமெரிக்காவில் பிறந்திருந்தால், நான் மலையை பெயர்த்திருப்பேன் போன்ற வீணான கற்பனைகள் எல்லாம் செல்லாகாசுகள். இருக்கும் இடத்தில் அதன் சூழலுக்கேற்ப வளர்ந்து நிலைபெறுவதே சிறப்பு. எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் உள்ள இடத்தில் வளர்ந்து மிளிர்வதை விட, முழுவசதிகளும் சென்றடையாத இடங்களில் வளர்வது மேன்மையானது. விறகின்றி தண்ணீரை வெந்நீராக்க தேவையான வசதிகள் இல்லாத Shaanxi மாநிலம் Mizhi பகுதியிலுள்ள விவசாயி ஒருவர், மதுபான புட்டிகளை பயன்படுத்தி சூரிய ஆற்றல் மூலம் நீரை வெப்பமாக்கும் ஓர் எளிய சாதனத்தை 2006 ஆம் ஆண்டு கண்டுபிடித்துள்ளார். 42 வயதான Ma Yanjun, அதன் மூலம் 73 வயதான தனதருமை தாயாருக்கு நாள்தோறும் வெந்நீரில் குளிக்க உதவியுள்ளார். அதுமட்டுமல்ல Ma Yanjun யை பார்த்து, தங்களுக்கும் அவ்வாறு செய்து தர பல விவசாயிகள் கோரவே, தற்போது அங்கு 20 உள்ளூர் விவசாயிகள் நீரை வெப்பமாக்கும் வசதி பெற்றுள்ளனர். இவரை விவசாயி என்பதா? படிக்காத மேதை என்பதா?

மூன்றில் ஒன்று

நீங்கள் உடல்நலம் குன்றி அடிக்கடி மருத்துவமனை செல்லாதவர்களா? மகிழ்ச்சியடையுங்கள். தற்போது 18 வயதாகியுள்ள பிரிட்டன் இளம்பெண் ஒருவர், நலமான சிறுமியாக தான் இருந்தார். 2002 ஆம் ஆண்டு 12 வயதானபோது, இனம்காணப்படாத நச்சுயிரியின் பாதிப்பால் அவரது இதய திசுக்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மாரடைப்பு ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டதால் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை 2002 ஆம் ஆண்டு செய்யப்பட்டது. 14 மாதங்களுக்கு பிறகு அவ்விதயம் அவருடைய உடலால் ஏற்றுக்கொள்ளப்படாததால் துன்பப்பட்டார். அதற்கான மருந்துகளும் பயனில்லாமல் போக, Pacemaker எனப்படும் இதய துடிப்பை சீர்படுத்தும் கருவி மூலம் சமாளித்தார்கள். ஆனால் இதயம் மிகவும் பலவீனமாகி 2003 ஆம் ஆண்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் இன்னொரு இதயம் கிடைக்க வாய்பில்லை என்பதால் மூன்று திங்கள் காலம் தான் உயிரோடிருப்பார் என்று கெடு கொடுத்து, Leanne க்கு பிரியாவிடை அளிக்க சொல்லிவிட்டார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக லண்டனில் கார் விபத்தில் பலியான 35 வயதான ஒருவரின் இதயம் கிடைக்கவே அது Leanne வுக்கு பொருத்தப்பட்டது. இரண்டாவது மாற்று இதயம் பொருத்தப்பட்டு நார்த்தம்பர்லெண்ட் Choppington பகுதியில் வாழும் Leanne Nicholson நம்பிக்கை கீற்றோடு மருத்துவ புதுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.