• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-04 09:41:01    
பெய்ஜிங்கிலுள்ள புத்த மத கோயில்கள்

cri
பெய்ஜிங் மாநகர், 3000 ஆண்டுகால வரலாறுடைய பண்டைகால நகரமாகும். பெய்ஜிங்கில் நாள்தோறும் புதிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, 2001ம் ஆண்டில், 29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் அதிகாரத்தைப் பெற்ற பிறகு, பெய்ஜிங்கில் நாளுக்கொரு மாற்றம் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. அதேவேளை, அரன்மணை மாளிகைகள், பொது மக்கள் வாழ்கின்ற நான்கு

பக்கம் வீடுகள் நடுவில் முற்றம் கொண்ட கட்டடங்கள், நம்பிக்கையாளர்கள் நிரம்பி வழிந்த புத்த மத கோயில்கள் ஆகியவற்றின் மூலம், மக்கள், பெய்ஜிங் மாநகரின் பழைய கதைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
பெய்ஜிங்கிலுள்ள புத்த மத கோயில்களில் பெரும்பாலனவை, ஹென் புத்த மத கோயில்களாகும். பெய்ஜிங்கின் தென் பகுதியில் அமைந்துள்ள பாஃ யுவான் கோயிலில், சீன புத்த மத இறையியல் கழகமும், சீன புத்த மத நூல் மற்றும் தொல் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடமும் உள்ளன. இக்கோயில், தாங் வம்சகாலத்தில் கட்டியமைக்கப்பட்டது. இதுவரை சுமார் 1300 ஆண்டுகால வரலாறுடையது. கடந்த சில

ஆண்டுகளில், இக்கோயிலின் அரிய தொல் பொருட்களையும் பண்பாட்டு மரபு செல்வத்தையும் பேணிக்காக்க, பெய்ஜிங் அரசாங்கம், சுமார் ஒரு கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது என்று குரு Zhi yong கூறினார். இங்கு தங்கி வருகின்ற சில வெளிநாட்டுப் பயணிகள் கூறியதாவது:
இக்கோயிலுக்கு வருவது இதுவே முதல்முறையாகும். மிகவும் அழகானது, அமைதியானது. அத்துடன், உயிராற்றல் மிக்க கோயிலாக உள்ளது. இங்குள்ள பண்டைகால மரங்களையும் அமைதியான சூழலையும் மிகவும் விரும்புகின்றார் என்றார்கள்.
குவாங் சி கோயில், பெய்ஜிங்கின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும். சின் வம்சகாலத்தில் கட்டியமைக்கப்பட்ட இக்கோயில், 800 ஆண்டுகால வரலாறுடையது. சீனாவின் முக்கியமான தொல் பொருள் பாதுகாப்பு இடமாக, அதன் பண்டைகால கட்டிடங்கள் நன்றாக பேணிக்காக்கப்பட்டு வருகின்றன. இங்கு பாதுகாக்கப்பட்டுள்ள

மதிப்புக்குரிய புத்த மத நூல்கள் மிகவும் அதிகம். இதில், சூங் மற்றும் மிங் வம்சகாலத்தில் ரத்தத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்ட புத்த மத நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
குவாங் சி கோயிலின் குரு Neng zhen பேசுகையில், பெய்ஜிங் ஒலிம்பிக்கை காணவரும் இறை நம்பிக்கையாளர்களை மேலும் செவ்வனே வரவேற்கும் வகையில், இவ்வாண்டி மே திஙகளில் சுமார் 100 நம்பிக்கையாளர்கள் அடங்கிய ஒலிம்பிக் வரவேற்பு குழுவை உருவாக்கியுள்ளதாக, தெரிவித்தார். அவர் கூறியதாவது:
மே திங்களில், இந்த வருவேற்பு குழுவினருக்குப் பயிற்சி அளிக்க தொடங்கினோம். புத்த மதத்தின் அடிப்படை பண்பாடு, குவாங் சி கோயிலின் வரலாறு, ஒலிம்பிக் பொது அறிவு ஆகியவை, பயிற்சியின் முக்கிய உள்ளடகங்களாகும் என்றார் அவர்.
வேறுபட்ட பயணிகளுக்கு வசதியை வழங்க, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி போது,

இக்கோயில், சைகை மொழி உள்ளிட்ட மொழி பெயர்ப்பு சேவையை வழங்கி வருகிறது. குரு Neng zhen கூறியதாவது:
மத சேவையை செவ்வனே செய்ய வேண்டும். குறிப்பாக, மத நண்பர்கள் மற்றும் மத நம்பிக்கையாளர்களுக்கான சேவையில் மொழி பெயர்ப்பு மிகவும் முக்கியமானது என்றார் அவர்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி காலத்தில், பன்னாட்டு நண்பர்கள் பெய்ஜிங் வருகின்றனர். இது, சீனாவின் பாராம்பரிய பண்பாட்டை எடுத்துக்காட்டி, உலக நாகரிகப் பரிமாற்றத்தை விரைவுபடுத்தும் வாய்ப்பு ஆகும் என்றும் குரு Neng zhen தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

ஒலிம்பிக் காலத்தில், ஒவ்வொருவரும் உலகிற்கு, அதன் நாகரிகத்தையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், இக்காலத்தில், நாங்கள் செய்ய போகும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம், உலக மக்கள் சீனர்களையும் சீனப் பண்பாட்டையும் மேலும் புரிந்துகொள்ளலாம் என்றார் அவர்.
பெய்ஜிங்கிலுள்ள ஒவ்வொரு கோயிலும் தத்தமது தனிச்சிறப்பியல்பையும், நீண்டகால வரலாற்றையும் கொள்கின்றன. இக்கோயில்களுக்கு சென்று, அதிகமான சீனப்பண்பாட்டு அடையாளங்களைக் கண்டறியலாம்.