• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-04 19:26:18    
ஊனமுற்றோர் ஒலிம்பிக் மீதான எதிர்பார்ப்பு

cri

13வது கோடைகால ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 6ம் நாள் பெய்ஜிங்கில் துவங்க உள்ளது. இதற்கான பல்வேறு ஆயத்தப் பணிகளும் தயாராகி விட்டன. முதலாவது நிலையிலுள்ள விளையாட்டு அரங்குகளும் திடல்கள், சிறந்த சேவை தரம், நிறைந்த பண்பாட்டுணர்வு ஆகியவை பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்களை இந்த பிரமாண்டமான விழாவை எதிர்பார்த்திருக்கச் செய்துள்ளன.

ஒற்றுமை என்னும் சீன கலை குழுவி குழந்தை உறுப்பினர்களின் இனிமையான ஒலியுடன் சிங்கப்பூர் ஊனமுற்றோர் ஒலிம்பிக் பிரதிநிதிக் குழு ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமத்தில் கொடியை ஏற்றும் விழா நடத்தியது. பிரதிநிதிக் குழுவின் உறுப்பினரான தடகள வீரர் சன் ச்சு சியாங் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது தடகள போட்டிகளை உற்று கவனித்துள்ளார். பறவைக் கூடு அரங்கில் ஒலிம்பிக் சாதனைகள் பல முறை முறியடிக்கப்பட்டதை கண்டு இந்த அற்புதமான போட்டியில் பங்கு கொள்வதை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார். துவங்கவுள்ள ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றி அவர் கூறியதாவது.

இது என்னுடைய முதலாவது ஒலிம்பிக் அனுபவமாகும். இப்போது தான் நான் முதலாவது முறையாக சீனா வருகிறேன். பெய்ஜிங்கில் போட்டிக்கான கருவிகளும் சாதனங்களும் வீரர்கள் தங்கியிருக்கும் கட்டிடங்களும் தரமானவை. சீன மக்கள் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடத்துவதால் பெருமையடைய வேண்டும் என்றார் அவர். கனவோடு பெய்ஜிங் வந்துள்ள ஸ்பெயின் நீச்சல் வீரர் மிகுல் அங்கெல் அரோயோவுக்கு வயது 24. பல்வகை காரணிகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற எதென்ஸ் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தார். இது அவருடைய வாழ்க்கையில் கவலையாக நீடிக்கிறது. நமது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் உணர்ச்சிவசப்பட்ட உணர்வை வெளிக்காட்டினார். பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அவர் விடாமுயற்சியுடன் பயிற்சியில் ஈடுபட்டார். நீர் கன சதுரம் என்னும் தேசிய நீச்சல் மையத்தில் அவருடைய கனவை நனவாக்க எதிர்பார்க்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது

எதென்ஸ் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளாத வருத்தத்துடன் நான் பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றேன். பயிற்சியில் நான் செவ்வனே ஈடுபட்டுள்ளேன். நான் கற்றுக் கொள்ளும் தொழிலுக்கு 3 ஆண்டுகள் தேவைபடுகின்றன. மேலும் கூடுதலான நேரத்தை பயிற்சியில் செலவிடும் வகையில் தொழில் கற்றுக் கொள்ளும் நேரத்தை நான் சுருக்கியுள்ளேன். நாளுக்கு இரண்டு முறை பயிற்சியில் ஊன்றி நின்றுள்ளேன். நான் மிகவும் மகிழ்ச்சியுடன் பெய்ஜிங் வந்தடைந்துள்ளேன். முழுமூச்சுடன் போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற பாடுபடுவேன் என்று அவர் கூறினார். 6ம் நாள் பெய்ஜிங்கில் துவங்க உள்ள 13வது கோடைகால ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரலாற்றில் மிகவும் பெரியதாகும். சுமார் 150 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 4000க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றார்கள்.

அவர்கள் 20 போட்டிகளின் 472 நிகழ்ச்சிகளில் போட்டியிடுவர். நடப்பு பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதி குழுக்கள் மிகவும் கவனம் செலுத்தியுள்ளன. கனடா 150 வீரர்கள் இடம் பெறும் பிரதிநிதி குழுவை அனுப்பியுள்ளது. பெய்ஜிங்கில் நல்ல சாதனை பெற எதிர்பார்க்கின்றது. தற்போது பெய்ஜிங் மாநகரில் இன்பமான இணக்க சூழ்நிலை நிறைந்துள்ளது. ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அம்சமாக கொண்ட பல்வகை காட்சிகள் நகரில் காணப்படுகின்றன. ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கு செழுமையான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவற்றின் மூலம் ஊனமுற்ற விளையாட்டு வீரர்கள் பெய்ஜிங்கில் இன்பமாக வாழப் பெய்ஜிங் வழி செய்யும்.