இன்று, 2008பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் சீனாவின் மத்திய பகுதியிலான ஹெநான் மாநிலத்தின் லோயாங் நகரில் நிறைவடைந்தது. 9 ஊனமுற்றோர் உள்ளிட்ட மொத்தம் 70 தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர். பண்டைய சீனா எனும் நெறியில், லோயாங் 5வது நகரமாகும். இது, பெய்சிங்கிலான தீபத்தொடரோத்திற்கு முன்பான இறுதி நகரமாகும் என்று தெரிய வருகிறது.
செப்டம்பர் 5ம் நாள், பண்டைய சீனா, நவீன சீனா என்று அழைக்கப்படும் இரு நெறிகள் பெய்சிங்கில் இணைந்து ஒரே தீபத் தொடரோட்டமாக நடைபெறும். 6ம் நாள், ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில், பறவைக்கூடு விளையாட்டரங்கில் முக்கிய தீபம் ஏற்றப்படும்.
|