• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-05 14:16:36    
சீனாவின் ஷூய் இனம்

cri

ஹூய் இனம், சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள அதிக மக்கள் தொகை கொண்ட சிறுபான்மை தேசிய இனமாகும். 1953ம் ஆண்டு, குய்சோ மாநிலத்தின் ஹூய் இனப் பிரதிநிதிகள் கலந்தாய்வு நடத்தி, ஹூய் என்பதை இவ்வினத்தின் ஆக்கப்பூர்வ பெயராக கொள்ள முடிவெடு்த்தனர். ஹூய் இன மக்கள், முக்கியமாக குய்சோ மாநிலத்தின் இரண்டு ஹூய்-மியோ இன தன்னாட்சி சோகளிலும், குய்சோ, யுன்னான், சிச்சுவான் முதலிய மாநிலங்களின் பிற இடங்களிலும் கூடி வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகை 25 இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேலாகும்.

ஹூய் இனத்தின் பண்பாடும் கலையும் செழிப்பாக இருக்கின்றன. புராணக் கதைகள், பழமொழிகள், கவிதைகள் முதலியவை, மக்களிடையில் பரவி வருகின்ற இலக்கியங்களாகும். மேள நடனம், நெசவு நடனம், சிங்க நடனம் முதலியவை, ஹூய் இனத்தின் பாரம்பரிய நடனங்களாகும்.

ஹூய் இன மக்கள், வேளாண்துறையில் ஈடுபடுகின்றனர். முக்கியமாக நெல்லை பயிரிடுகின்றனர். விவசாய குடும்பங்களால் நெசவு செய்யப்பட்ட துணி, புகழ் பெற்றது. கடந்த சில ஆண்டுகளாக,பூ வேலைப்பாடு கொண்ட பட்டுத்துணியையும், தேசிய இனத் தனிச்சிறப்பு வாய்ந்த ஆடைகளையும் உற்பத்தி செய்கின்ற தொழில் நிறுவனங்கள் பல நிறுவப்பட்டன. உற்பத்திப் பொருட்கள், தென்கிழக்கு ஆசியா, ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா முதலிய பிரதேசங்களில் விற்கப்படுகின்றன.

ஹூய் இன மக்கள், மலைகள் மற்றும் ஆறுகளின் அருகில் வசிக்க விரும்புகின்றனர். பொதுவாக கூறின், சில ஊரி்களில் பத்து அல்லது பல பத்து குடும்பங்கள் அடங்குகின்றன. வேறு சிலவற்றில், நூறு குடும்பங்கள் அடங்குகின்றன.

ஹூய் இனத்தோர் மூதாதையாரை வழிபடுகின்றனர். பல கடவுள்களையும், இயற்கையையும் வழிபாடு செய்கின்றனர். சிலர் கத்தோலிக்க மதத்திலும் கிறிஸ்தவ மதத்திலும் நம்பிக்கை கொள்கின்றனர்.

அவர்களின் பாரம்பரிய விழாக்களில், வசந்த விழா, நிலவு திருநாள் ஆகியவை தவிர, மிகச் சிறப்பானது. சீன சந்திர நாள் காட்டியின்படி 6ம் திங்களின் 6வது நாளாகும்.

ஹூய் இன மக்கள், பசை அரிசியை விரும்புகின்றனர். இலையுதிர்கால அறுவடைக்குப் பின், ஒவ்வொரு குடும்புமும் அரிசியாலான மதுவை செய்து சேமித்து வைக்கிறது. இதனால் ஆண்டு முழுவதும் இம்மதுவை அவர்கள் அருந்த முடியும்.