தற்போது, பெய்ஜிங் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியின் ஆயத்தப்பணிகள், முடிக்கப்பட்டு விட்டன என்று பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புக் குழுவின் துணைத் தலைவரும் பொது செயலாளருமான Wangwei இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
ஊனமுற்றோருக்கான பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அரங்குகளும், வேறு அரங்குகளும், ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் கிராமத்தின் சிறப்பு வசதிகளும் வரையறையை எட்டியுள்ளன. எல்லா தடையற்ற சிறப்பு வசதிகளின் சரிப்படுத்தலும் நிறைவேற்றப்பட்டது. தவிர, பதிவு செய்யப்பட்ட 17 லட்சத்து 80ஆயிரம் பணியாளர்களும், 40 ஆயிரத்துக்கு அதிகமான தொண்டர்களும் தயாராக இருக்கின்றனர் என்று ஊனமுற்றோருக்கான பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் முக்கிய செய்தி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டி தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய, தற்போது, ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டிக்கான காட்சி மற்றும் குறிப்புகளின் ஏற்பாட்டுப் பணி நிறைவேற்றப்பட்டது. பொதுப் போக்குவரத்து மற்றும் முக்கிய காட்சி தலங்களில், தடையற்ற சிறப்பு வசதிகளின் கட்டுமானத்தை பெய்ஜிங் மேம்படுத்தியுள்ளது என்றும் அவர் அறிமுகப்படுத்தினார்.
|