• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-05 09:30:18    
காகிதக் கத்தரிப்பு கலைஞர் பன் சியாவ் மெய்

cri
பன் சியாவ் மெய் அம்மையார், ஷன் சி மாநிலத்தின் ஆன் சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வட்டத்தில் பிறந்தார். அவரது தாய் உள்ளூர் புகழ்பெற்ற காகிதக் கத்தரிப்புக் கலைஞராக திகழ்ந்தவர். ஆனால், குழந்தை பருவத்தில் பன் சியாவ் மெய் தனது தாயை போன்று காகிதக் கத்தரிப்பை அவ்வளவு விரும்பவில்லை. திருமணத்துக்கு முன் காகிதக் கத்தரிப்பு மற்றும் பூ வேலைப்பாட்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உள்ளூர் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப, அவர் தனது 8வது வயதிலிருந்து காகிதக் கத்தரிப்பைக் கற்றுக் கொள்ளத் துவங்கினார். சில அரிய அனுபவங்களே, பன் சியாவ் மெய் காகிதத் கத்தரிப்புக் கலைஞராக வளர்வதற்கான முக்கிய காரணங்களாகும்.

1989ஆம் ஆண்டு குளிர்காலத்தில் ஒரு நண்பகல், பொன் நிற தலைமுடி மற்றும் நீல நிற கண்களுடனான அந்நிய முதியவர் ஒருவர், பன் சியாவ் மெயின் வீட்டுக்குச் சென்றார். அப்போது 11 வயதான அவர் முதன்முறை வெளிநாட்டுவர் ஒருவரைச் சந்தித்தார். தொலைதூரத்திலிருந்து வந்த அந்த முதியவர் பன் சியாவ் மெய் குடும்பத்தின் மலைக் குகை வீட்டில் நுழைந்ததும், சுவரில் ஒட்டப்பட்ட பல்வகை காகிதக் கத்தரிப்பு படைப்புகளை நீண்ட நேரம் கண்டு ரசித்தார். "1988ஆம் ஆண்டில் எனது தாய் அந்த படைப்புகளை உருவாக்கினார். அவற்றின் நிறம் புகையால் மாறியிருந்தது. ஆனால் தாயின் அனுமதியைப் பெற்று, அந்த முதியவர் சுவரில் ஒட்டப்பட்டிரருந்த அனைத்து படைப்புகளையும் எடுத்தார். எனது தாயிடம் 300 யுவானை வழங்கினார். அவை அரிய கலைப் படைப்புகளாகும் என்று அவர் கூறினார்" என்றார் பன் சியாவ் மெய். அப்போது அவர் அதிர்ச்சியடைந்தார்.

1990ஆம் ஆண்டில் பன் சியாவ் மெயின் தாய் அழைப்பை ஏற்று, மாவட்ட பண்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற காகிதக் கத்தரிப்பு பரிமாற்ற நடவடிக்கையில் கலந்து கொண்டார். தாயுடன் இணைந்து சென்ற பன் சியாவ் மெய் அந்த நடவடிக்கையின் போது வியப்பில் மூழ்கினார். பெய்ஜிங்கிலிருந்து வந்த ஒரு ஆசிரியை பன் சியாவ் மெயின் தாய் காகிதக் கத்தரிப்புக் கலைஞராக இருப்பதை அறிந்துக் கொண்ட பின், "காகிதக் கத்தரிப்பு மூலம் உனது வாழ்க்கையை மாற்ற முடியும்" என அவரிடம் கூறினார். அந்த ஆசிரியையின் வார்த்தை பனியை நீக்கும் சூரிய ஒளி போல், பன் சியாவ் மெயின் தயக்கத்தை நீக்கியது. மலையிலிருந்து வெளியேற காகிதக் கத்தரிப்பைக் கற்றுக் கொள்ள அவர் உறுதி பூண்டார்.
வீடு திரும்பியதும், தாயிடமிருந்து அதிகாரப்பூர்வமாக காகிதக் கத்தரிப்பைக் கற்றுக்

கொள்ளத் துவங்கினார். துரதிர்ஷ்டவசமாக, 1992ஆம் ஆண்டில் அவரது தாய் மரணமடைந்தார். அதற்குப் பின், அவர் தனது சொந்த வழிமுறையில் கற்றுக் கொண்டு வந்தார். கோழி மற்றும் பறவை வடிவிலான காகிதக் கத்தரிப்பில் அவரது தாய் தேர்ச்சி பெற்றதால், பறவை வடிவிலான 100 படைப்புகளைக் கத்தரிப்பதன் மூலம் தனது நுட்பத்தை உயர்த்துவதென அவர் முடிவு செய்தார். ஒரு திங்கள்காலப் பயிற்சிக்கு பின், பறவை வடிவிலான 100 படைப்புகளை அவர் மாவட்ட பண்பாட்டு மன்றத்திற்கு கொண்டு சென்றார். எதிர்பாராத பாராட்டுகளைப் பெற்று அவர் மேலும் பெரும் நம்பிக்கை கொண்டார். ஓராண்டுக்கு மேலான சொந்த பயிற்சி மூலம், பன் சியாவ் மெயின் காகிதக் கத்தரிப்பு நிலை பெரும் முன்னேற்றம் அடைந்தது.

1994ஆம் ஆண்டு அவர் சொந்த ஊரை விட்டு, கனவை நாடும் பாதையில் பயணம் மேற்கொண்டார். காகிதக் கத்தரிப்பின் சிந்தனையை அதிகரிக்க, மத்திய நுண்கலை கழகத்தில் மேற்படிப்புக்காக நுழைந்தார். அக்காலத்தில் பாரம்பரிய கலையில் அவர் நவீன அம்சங்களைச் சேர்த்து படைத்த காகிதக் கத்தரிப்பு சமூகத்தில் பாராட்டுகளைப் பெற்றது. இவை பற்றிய பாடம் கொடுக்க அவர் அடிக்கடி மலேசியா, சிங்கப்பூர், தைவான், ஹாங்காங் ஆகிய இடங்களுக்கு அழைக்கப்படுகிறார். இந்த அனுபவங்களால், மலையிலிருந்து வெளியேறும் கனவை நிறைவேற்றியதோடு, காகிதக் கத்தரிப்பின் ஈர்ப்பு ஆற்றலையும் பன் சியாவ் மெய் அறிந்து கொண்டார்.