• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-05 09:32:55    
சீனப் பளுதூக்குதல் அணியின் சாதனை 1

cri
ஆகஸ்ட் திங்கள் 15ம் நாளிரவு, பெய்ஜிங் வானூர்தியியல் மற்றும் விண்வெளிப் பயணவியல் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆடவர் 85 கிலோ எடைக்கு குறைவானோர் பளுதூக்குதல் போட்டியில், சீன வீரர் லூ யுங், தங்கப் பதக்கம் பெற்றார். அதுவரை, சீனப் பளுதூக்குதல் அணி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், 8 தங்கப் பதக்கங்களையும் 1 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று, வரலாற்றில் மிக நல்ல சாதனை உருவாக்கியது.

சீனப் பளுதூக்குதல் அணியின் வீரர்கள், பதக்கம் பெற்ற போது, இத்தகைய ஆரவாரமான கரவொலியை, நாள்தோறும் விளையாட்டு அரங்கில் கேட்கலாம்.
பெய்ஜிங் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் போட்டிக்குப் பொறுப்பான தலைவர் வாங் யேன் அம்மையார், முன்பு, சீனப் பளுதூக்குதல் அணியில் இருந்தவராவார். அவர் கூறியதாவது:
சீனப் பளுதூக்குதல் அணி, தலைச்சிறந்த சாதனைகளைப் பெற்றதற்கு, மகிழ்ச்சியடைகின்றேன். ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை விட, மேலும் நல்ல சாதனையாகும். தங்கப்பதக்க எண்ணிக்கை, உலக சாதனையை முறியடிக்கும் நிலைமை, போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்திய எழுச்சி, சுய நம்பிக்கை மற்றும் திறன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அதனால், நாங்கள் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளோம். அவர்கள், நான்கு ஆண்டுகால முயற்சி மூலம், இச்சாதனைப் பெற்று, சீன மக்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தியுள்ளனர் என்றார் அவர்.

நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், சீன மகளிர் பளுதூக்குதல் அணி, நான்கு போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றது. இது, சீனப் பளுதூக்குதல் அணியின் வலிமையான ஆற்றலால் தான் சாத்தியமானது என்று, மகளிர் 75 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியின் தங்கப் பதக்கத்தைப் பெற்ற Cao lei கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
பளுதூக்குதல் போட்டி, உண்மையான ஆற்றலுடன் தொடர்புடையது. எமது சீன மகளிர் பளுதூக்குதல் அணி, தமது ஆற்றலைச் சார்ந்து, தலைசிறந்த சாதனைப் பெற்றுள்ளது என்றார் அவர்.
விளையாட்டு வீரர்களின் சாதனை, பயிற்சியாளர்களின் முயற்சிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சீனத் தேசிய விளையாட்டு ஆணையத்தின் பளுதூக்குதல் மற்றும் மற்போர் மையத்தின் இயக்குநரும், சீனப் பளுதூக்குதல் அணித் தலைவருமான Ma wen guang கூறியதாவது:

கண்டிப்பாக கூறினால், அறிவியல் ரீதியான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றோம். விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும், போட்டியிடும் வழிமுறையையும், தொழில் நுட்பத்தையும் உணர்வுப்பூர்வமாக ஆராய்ந்து அவற்றை மேற்கொள்கின்றனர். குறிப்பாக, அவர்களின் சாதனை மற்றும் எழுச்சி தோற்றம், தேசிய விளையாட்டு ஆணையம் மற்றும் சீனப் பிரதிநிதிக்குழுவின் கோரிக்கையை எட்டியுள்ளன. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், அவர்கள் பெற்றுள்ள சாதனைக்கு மனநிறைவு அடைகின்றேன். எதிர்கால பயிற்சி மற்றும் போட்டிகளில் அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து, இடைவிடாமல் தலைசிறந்த சாதனைகளைப் பெறுவார்கள் என நம்புகின்றேன் என்றார் அவர்.