பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதன் மூலம் சீனாவின் நகரங்களில் தடையில்லாமல் செல்லும் வசதிகளின் கட்டுமானம் பெரிதும் முன்னேற்றப்பட்டுள்ளது. ஊனமுற்றவர்களுக்கு வசதி வழங்கும் பொது நிர்வாக நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கான சமூக தேவையின் முக்கியத்துவத்தை இந்த விளையாட்டுப் போட்டி நடத்துவதன் மூலம் சீன மக்கள் மேலும் அறிந்து கொண்டுள்ளனர். பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளை பார்வையிட்ட போது சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் பிஃலிப் கராவென் கூறியதாவது.
சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் வெளிப்படையாக பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி போல் மிக சிறப்பாக நடத்துவோம் என்று வாக்குறுதியளித்தார். இந்த வாக்குறுதி பல்வேறு செயல்களின் மூலம் நிறைவேற்றப்படும். உண்மையில் நாங்கள் இப்போது கண்டறிந்த பல செயல்கள் இரண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளும் ஒரே மாதிரி சிறந்த முறையில் அமையும் என்பதை எங்களுக்கு காட்டியுள்ளது என்று அவர் கூறினார். 2008ம் ஆண்டில் பெய்ஜிங் உலகத்திற்கு மனித நேய எழுச்சியும் மானிட மைய ஒலிம்பிக் கருத்தும் சீனாவில் அதிகரித்துள்ளதை உணரச் செய்துள்ளது. மனித குல சமூகத்தின் நாகரிக முன்னேற்றம் நிறைந்த பிரமாண்டமான கொண்டாட்ட விழாவை கண்டு இரசிக்க முடியும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் துணைத் தலைவரும் சீன ஊனமுற்றோர் சம்மேளனத்தின் தலைவரும், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் செயல் தலைவருமான தென்பூபாஃங் கூறினார். நடைமுறையில் சாதாரண மக்களுடன் இணைந்து ஒலிம்பிக் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள ஊனமுற்றவருக்கு உதவும் வகையில் பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது அரங்குகள், செய்தி ஊடக சேவை, ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமம், போக்குவரத்து முதலியவற்றில் தடையில்லாமல் செல்லும் வசதிகள் அமைந்த திட்ட பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் விளைவாக பெய்ஜிங் தடையில்லாத வசதிகளுடன் அனைவரும் எளிதாக பயணம் செய்யும் நகரமாக உருவாகியுள்ளது. சீனாவில் சமூகம் முழுவதும் ஊனமுற்றவர்களுக்கு உதவுவது சிறந்த சூழ்நிலையாகியுள்ளது. ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடத்துவதினால் இந்த சூழ்நிலை மேலும் கோலாகலமாக இருப்பதில் ஐயமேயில்லை. பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் ஊனமுற்றோர் ஒலிம்பிக் பிரிவின் துணை அமைச்சர் வுகாங் பிங் யான் கூறியதாவது.
ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியையும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியையும் ஒப்பிட்டு பார்த்தால் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுப்பு மேலும் கூடுதலாகும். தங்கப் பதக்கம் கணக்குப் பார்பதில் மக்கள் கவனம் செலுத்த போவதில்லை என்றார் அவர். ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனச் சமூகத்திற்கு மிக சிறந்த வாய்ப்பு வழங்கியுள்ளது. ஊனமுற்றவர்களிடையில் சமூக தேவையை மேலும் ஆழமாக அறிந்து கொள்ள இது துணை புரியும். சீனச் சமூகத்தின் மானிட நேய நிலை மேலும் உயரும். இதனால் சீனச் சமூக பன்முகங்களிலும் முன்னேற்றமடைவது இயல்பு. ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கென மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வகை சிறப்பு பொது நிர்வாக நடவடிக்கைகளும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது உத்தரவாதம் செய்யப்படுவது மட்டுமல்ல எதிர்காலத்திலும் நிலைநிறுத்தப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது. ஊனமுற்றவருக்கு சேவை புரியும் தரம் தேசம் மற்றும் சமூகத்தின் நாகரிக அளவை எடுத்துக்காட்டுகின்றது. ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவுக்கு நாகரிகத்தையும் மானிட மைய அன்பையும் வெளிகாட்டும் மேடையை வழங்குகின்றது. உடலில் ஊனம் கொண்டவர்கள் எழுச்சியை இழக்கவில்லை. போட்டியிடும் போது அவர்களை ஊக்கமூட்டி பாராட்டுவது மட்டுமல்ல அவர்களுக்கான சேவை எண்ணத்தை தொடர்ந்து எவ்வாறு உயர்த்து என்பது கருத்தில் கொள்ள வேண்டும்.
|