பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள பெய்ஜிங் வந்தடைந்துள்ள மதிப்புக்குரிய சர்வதேச விருந்தினர்களை வரவேற்கும் வகையில் சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் அவர்தம் துணைவியார் ஆகியோர் 6ம் நாள் மதியம் மக்கள் மாமண்டபத்தில் மாபெரும் விருந்து அளித்தனர். தனிச்சிறப்பியல்பு மிக்க உயர் தரமான ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதில் சீன அரசுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை உண்டு என்று வரவேற்புரையில் ஹுச்சிந்தாவ் தெரிவித்துள்ளார். நடப்பு ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பல்வேறு நாடுகளின் ஊனமுற்றவர்களிடை புரிந்துணர்வையும் நட்பையும் அதிகரிப்பதற்கான அரங்காகவும், உலகின் ஊனமுற்றவர் உடற்பயிற்சித் துறைக்கு மதிப்புக்குரிய எழுச்சி சொத்தை வழங்குவதாகவும் அமைய பாடுபட வேண்டும் என்று ஹுச்சிந்தாவ் விருப்பம் தெரிவித்தார்.
6ம் நாள் மதியம் மக்கள் மாமண்டபத்தில் வரவேற்பு அதிகாரி ஒருவர் அறிமுகப்படுத்த ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கின்ற மதிப்புக்குரிய விருந்தினர்களை அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் மற்றும் அவர்தம் துணைவியார் கைகுலுக்கி வரவேற்றனர். சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் க்ரேவன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கௌரவத் தலைவர் சமாரான்ச் உள்ளிட்ட 80 முக்கிய தலைவர்கள் பெய்ஜிங்கில் குவிந்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். விருந்து துவங்கியதுடன் ஹுச்சிந்தாவ் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது.
சீன அரசு மற்றும் மக்களின் சார்பில் தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வரவேற்பு தெரிவிக்கின்றேன். பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பங்கு ஆற்றிய நண்பர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவிக்கின்றேன் என்றார் ஹுச்சிந்தாவ். கடந்த 60ம் ஆண்டுகளில் முதலாவது ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது முதல் சர்வதேசச் சமூகத்தின் கூட்டு முயற்சியுடன் இந்த போட்டி மனித குலத்தின் பரஸ்பர புரிந்துணர்வையும் நட்பையும் அதிகரித்து உலகின் நாகரிகத்தின் வளர்ச்சியை முன்னேற்றும் முக்கிய பண்பாட்டு விளையாட்டு விழாவாக மாறியுள்ளது. பல்வேறு நாடுகளின் ஊனமுற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் தன்னம்பிக்கை, தன் வலிமை மற்றும் தற்சார்ப்பை மக்களுக்கு வெளிக்காட்டியுள்ளனர். தனக்குத் தானே சவாலிவிட்டு உயிரின் மதிப்பீட்டு குறிக்கோளை நிறைவேற்றியுள்ளனர். அதேவேளையில் சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியும் ஊனமுற்றவர்களையும் சாதாரண மக்களையும் உலக குடும்பத்தில் பரஸ்பரம் இணைந்து சமூக உரிமையை கூட்டாக பகிர்ந்து கொண்டு இணக்கமான உலகை கூட்டாக உருவாக்க ஊக்குவித்துள்ளனது. சீனாவில் 8 கோடியே 30 லட்சம் ஊனமுற்றவர்கள் வாழ்கின்றனர் அவர்கள் மீது சீன அரசும் மக்களும் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளனர். ஊனமுற்றோர் லட்சியத்தின் பன்முக வளர்ச்சியை முன்னேற்றும் வகையில் பல கொள்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீனா பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வாய்ப்பாக பயன்படுத்தி ஊனமுற்றவர்களின் உரிமையையும் நலனையும் பேணிக்காப்பதில் தொடர்ந்து ஊன்றி நிற்கும். இது பற்றி ஹுச்சிந்தாவ் கூறியதாவது.
நாங்கள் பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வாய்ப்பாக பயன்படுத்தி மனித நேய எழுச்சியை மேலும் வெளிக்கொணர்ந்து ஊனமுற்றவர்களின் உரிமையையும் நலனையும் பாதுகாப்பதில் ஊன்றி நிற்க வேண்டும். அவர்களை சமத்துவ முறையில் சமூக வாழ்க்கையில் நுழைந்து சமூகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை கூட்டாக பகிர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்று ஹுச்சிந்தாவ் தெரிவித்தார். 6ம் நாள் துவங்கியுள்ள பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 140க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 4000க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு தேவைப்படும் பயிற்சி அரங்குகள் திடல்கள், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றில் தடையில்லாமல் செல்லும் வசதிகளின் கட்டுமானம் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆயத்தப் பணி பற்றி ஹுச்சிந்தாவ் கூறியதாவது.
2001ம் ஆண்டு பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமை சீனாவுக்கு வழங்கப்பட்ட பின் சீன அரசும் மக்களும் சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேசச் சமூகம் ஆகியவற்றின் மாபெரும் ஆதரவுடன் சர்வதேசச் சமூகத்திற்கு அளித்த வாக்குறுதியை நுணுக்கமாக நடைமுறைபடுத்தியுள்ளனர். இரண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை ஒரே மாதிரி சிறந்ததாக அமையும் கோரிக்கையின் படி முழுமூச்சுடன் பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை தனிச்சிறப்பியல்பு மிக்க உயர் தரமான போட்டியாக நடத்துவோம் என்றார் அவர்.
|