• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-07 10:45:54    
வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் மற்றும் மக்களின் பாராட்டுக்கள்

cri
பெய்ஜிங் 2008 ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா நேற்றிரவு பறவை கூடு என்ற சீனத் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் முதலிய நாடுகளின் செய்தி ஊடகங்கள் இம்மாபெரும் விழாவை அறிவித்து, இது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவை போல் சிறப்பாக அமைக்கப்பட்டதாகவும், நடிகர்களின் அரங்கேற்றம் முழு உலகை கவர்ந்துள்ளது என்றும் கருத்து தெரிவித்தன. துவக்க விழா மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. சிறிய நடிகர்கள் சீனக் குழந்தைகளைச் சிறப்பாகப் பிரதிநிதிப்படுத்தியுள்ளனர். அவர்களின் அரங்கேற்றம் சீன இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பது உறுதி என்று BBC கூறியது. இரண்டும் ஒலிம்பிக் போட்டிகள் ஒரே சிறந்த மாதிரியாக அமைப்பதற்கு சீனா மாபெரும் முயற்சி செய்துள்ளது. தவிர, ஊனமுற்றோர்களுக்கு சீனா பல்வகை வசதிகளை ஏற்பாடு செய்தது என்று பிரான்ஸின் AFP நிறுவனம் கூறியது. அமெரிக்காவின் NBC நிறுவனத்தின் இணையம் இவ்விழாவை நேரடியாக வழங்கியது. அமெரிக்கா இணையம் மூலம் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நேரடியாக வழங்குவது இதுவே முதல் முறையாகும். தவிர, துருக்கி, ஸ்பேயின், தென் கொரியா, தென்னாப்பிரிக்கா, முதலிய நாடுகளின் செய்தி ஊடகங்களும் அதிகாரிகளும் இந்தத் துவக்க விழாவை வெகுவாகப் பாராட்டினர்.