• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-07 19:18:48    
வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் பாராட்டு

cri
பெய்ஜிங் 2008 ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா நேற்றிரவு பறவை கூடு என்ற சீனத் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளின் செய்தி ஊடகங்கள் இம்மாபெரும் விழாவை அறிவித்து, இது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவை போல் சிறப்பாக அமைக்கப்பட்டது என்று கருத்து தெரிவித்தன. துவக்க விழா மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. சிறிய நடிகர்கள் சீனக் குழந்தைகளைச் சிறப்பாகப் பிரதிநிதிப்படுத்தியுள்ளனர். அவர்களின் அரங்கேற்றம் சீன இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பது உறுதி என்று BBC கூறியது. பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, அனைத்துலக ஊனமுற்றோர் விளையாட்டு வீரர்களுக்கும் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை போன்ற சிறப்பான அரங்கேற்ற வாய்ப்பை வழங்கியது என்று அமெரிக்காவின் AP நிறுவனம் அறிவித்தது. இத்துவக்க விழா கீழை நாட்டின் அழகை வெளிப்படுத்தி, தாங்களைத் தாண்டி இணக்கமாக வாழ்வது என்ற எழுச்சியைக் காட்டியது என்று ஸ்பேயின் EFE செய்தி நிறுவனம் கூறியது. தவிர, எகிப்து, மலேசியா, பிரேசில், துருக்கி, ஸ்பேயின், தென் கொரியா, தென்னாப்பிரிக்கா, முதலிய நாடுகளின் செய்தி ஊடகங்களும் அதிகாரிகளும் இந்தத் துவக்க விழாவை வெகுவாகப் பாராட்டினர்.