• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-07 17:36:11    
2008 பெய்சிங் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டி

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பிந்திய 12வது நாளின் இரவு, பெய்ஜிங் 2008 ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் நடப்பு ஊனமுற்ரோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்குவதாக அறிவித்தார். சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Philip Craven துவக்க விழாவில் உரைநிகழ்த்திய போது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை போல் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியும் மிக சிறப்பாக நடைபெறுவது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார். அடுத்த 12 நாட்களில், உலகில் மக்களுக்கிடையிலான இடைவெளி அவ்வளவு தெளிவாக இல்லை என்பதை நாங்கள் கண்டுபிடிக்கலாம் என்று Craven கூறினார்.

சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டியின் 162 உறுப்பு நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 147, நடப்புப் போட்டியில் கலந்து கொள்கின்றன. விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளின் எண்ணிக்கை 4000க்கு மேலாகும். இவ்விரண்டு எண்ணிக்கைகளும் கடந்த போட்டிகளின் எண்ணிக்கைகளைத் தாண்டியுள்ளன.

சீன அரசும் மக்களும் மிகப் பெரும் ஆர்வத்துடன் பெய்சிங் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டியை ஆதரிக்கின்றன. நடப்பு ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டி, மகிழ்ச்சி, நட்பு, கனவு, வெற்றி ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளும் விழாவாக மாறும் என்று நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் என்று பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவர் லியுச்சி கூறினார்.