• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-07 18:58:26    
ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமப்புறத்தில் பயணம் மேற்கொண்ட விருந்தினர்

cri

ஜெர்மன் அரசுத் தலைவர் Horst Koehler, ஸ்விட்சர்லாந்து பாதுகாப்பு அமைச்சரும் விளையாட்டு அமைச்சருமான Samuel Schmid முதலியோர் இன்று பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமப்புறத்தில் பயணம் மேற்கொண்டனர்.

பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் துணைத் தலைவரும் பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமப்புறத்தின் தலைவருமான Chen Zhili அம்மையார் அவர்களது வருகைக்கு வரவேற்பு தெரிவித்தார். வென்ச்சுவான் கடும் நிலநடுக்கம், பெய்சிங் 2008 ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயதப் பணி ஆகியற்றில் ஜெர்மன் அரசு சீனாவுக்கு உதவிகளை வழங்கியதற்கு Chen Zhili அம்மையார் உளமார நன்றி தெரிவித்தார். 2008 பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஊனமுற்றோருக்கான முழு சமூகத்தின் கவனத்தை சீனா உயர்த்தி, ஊனமுற்றோர் இலட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்றும் என்றும் அவர் கூறினார்.

பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் என்று ஜெர்மன் அரசுத் தலைவர் Horst Koehler தெரிவித்தார்.ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமப்புறத்திலுள்ள வசதிகளின் மீது அவர் ஆர்வம் காட்டினார் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை கண்டுகளிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, அழகாகவும் தனிச்சிறப்பாகவும் உள்ளது. இதில் பல கலைநிகழ்ச்சிகள் மக்களுக்கு மனமுருகின என்று ஸ்விட்சர்லாந்து பாதுகாப்பு அமைச்சரும் விளையாட்டு அமைச்சருமான Samuel Schmid கூறினார்.