600 நாட்களுக்குப் பிறகு, 2010ம் ஆண்டு ஷங்காய் உலக பொருட்காட்சி துவங்கும். 7ம் நாள் வரை, 177 நாடுகள் மற்றும் 44 சர்வதேச அமைப்புகள் ஷாங்காய் உலக பொருட்காட்சியில் கலந்துகொள்ள உறுதிப்படுத்தியுள்ளன. உலக பொருட்காட்சியை நடத்த விண்ணப்பித்த போது, சீனா தெரிவித்த 200 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் என்ற நோக்கு முன்னதாகவே நனவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு இறுதி வரை, பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் உடன்படிக்கையில் மேலதிக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கையொப்பமிடும் என்று ஷங்காய் உலக பொருட்காட்சியின் ஒருங்கிணைப்பு ஆணையத்தின் துணை தலைவர் Zhou Hanmin ஷாங்காய் மாநகரில் கூறினார்.
|