• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-16 09:45:20    
குவாங் சி கோயில் (அ)

cri

குவாங் சி கோயில், ஹோங் ச்சி குவாங் சி கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. அது, பெய்ஜிங் மாநகரின் ஃபூ ச்செங் மன் நெய் பிரதேசத்தின் சி ஸ் பகுதியில் உள்ளது. அது, புத்த மதத்துறையில் புகழ்பெற்ற பழைய கோயில்களில் ஒன்றாகும். சீனப் புத்த மதச் சங்கம் இங்கு தான் நிறுவப்பட்டது. 1983ம் ஆண்டு, அது, ஹான் இனப் பிரதேசத்தின் முக்கிய புத்த மதக் கோயிலாக அரசவையால் நிர்ணயிக்கப்பட்டது.

அது, சொங் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்டது. முதலில், அது சி லியொ ஊர் கோயில் என அழைக்கப்பட்டது. பழங்காலத்தில் அது பல முறை செப்பனிடப்பட்டது. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின, 1952ம் ஆண்டு, அது முழுமையாகப் பழுது பார்க்கப்பட்டது. 1959ம் ஆண்டு, சீன புத்த மதச் சங்கம் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது. இச்சங்கம், குவான் சி கோயிலில் உள்ளது.

அதன் மொத்த பரப்பளவு சுமார் 2.2 ஹெக்டராகும். அது தெற்கு நோக்கி, வடக்கு பகுதியில் அமைந்திருக்கிறது. அதன் ்ச்சாணி கம்பியில், ஷான் மென் மண்டபம், தியன் வாங் மண்டபம், தா சியோங் பௌ மண்டபம், யுவான் தோங் மண்டபம் மற்றும் துவோ பௌ மண்டபம் காணப்படலாம்.

இக்கோயிலின் வட மேற்குப் பகுதியில் 1678ம் ஆண்டு கட்டியமைக்கப்பட்ட துறவறமேற்பு பலிப்பீட மண்டபம் மற்றும் வெள்ளை கற்களால் கட்டியமைக்கப்பட்ட துறவறமேற்பு பலிபீடம் இருக்கின்றன. அவை, இக்கோயிலில் மிகப் பழைய கட்டிடங்களாகும். அவை சான் ச்சி தாங் என அழைக்கப்படுகின்றன. இக்கோயிலுக்குள்ள சி லூ நாலா பக்க வீடுகளும் நடுவில் முற்றமும் கொண்ட கட்டடத்தில், சீன புத்த மதச் சங்கத்தின் பல்வேறு வாரியங்களின் அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன.