• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-08 09:37:52    
சீனப் பளுதூக்குதல் அணியின் சாதனை 2

cri
வீராங்கனை Chen yan qing, 29 வயதுள்ளவர். நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் 58 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட வீராங்கனைகளில், அவர் வயதில் மூத்தவர். தங்கப் பதக்கம் வென்ற பின், கடந்த நான்கு ஆண்டுகளின் முயற்சியை அவர் நினைவு கூர்ந்தார்.

2008ம் ஆண்டில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தங்கப் பதக்கத்தைப் பெறுவேன் என்று முன்பு நினைக்கவில்லை. நான்கு ஆண்டுகள், மூத்த விளையாட்டு வீரரைப் பொறுத்தவரை, நீண்டகாலமாகும். ஆனால் பலர் எனக்கு உதவி அளித்து, ஊக்கமளித்தனர். இன்றைய உயிராற்றல், எனக்கு ஆதரவு அளிப்பவரின் முயற்சியுடன் தொடர்புடையது. இந்த தங்கப் பதக்கம், என்னை ஆதரித்தோர் அனைவருக்கும் சொந்தமானது என்றார் அவர்.
தலைசிறந்த சாதனைகளைப் பெற்ற பின், சீனப் பளுதூக்குதல் அணி, கனவு அணியாக அழைக்கப்பட்டுள்ளது என்று இரசிகர்கள் வியப்பாக தெரிவித்தனர். ஆனால், எதிர் அணிகள் போதிய ஆற்றலை வெளிப்படுத்தவில்லை என்பது, சீனப் பளுதூக்குதல்

அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகும் என்று, Ma wen guang எமது செய்தியாளரிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
எமது எதிர் அணிகள், வலிமையாக இருக்கின்றன. வழிமுறை மற்றும் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டை நாங்கள் நுணுக்கமாக விவாதித்து, கருத்தில் கொண்டதால், வெற்றி பெற்றோம் என்றார் அவர்.
சீனாவில், பளுதூக்குதல் விளையாட்டு, சீரான பயிற்சி மற்றும் திறமைசாலி காப்புறுதி அடிப்படையைக் கொள்கின்றது என்று சர்வதேசப் பளுதூக்குதல் சம்மேளனத்தின் தலைவர் Tamas AJAN கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

என்னுடைய தொழில் நுட்ப அதிகாரி, சீனாவின் விளையாட்டு கழகம் ஒன்றுக்குச் சென்றுள்ளார். அங்கே, விளையாட்டு வீரர்கள் நல்ல அடிப்படையைக் கொண்டுள்ளனர். அவர்கள் நாள்தோறும் பயிற்சி செய்து, சீரான உணவு மற்றும் மருத்துவச்சிகிச்சை காப்புறுதியைக் கொண்டுள்ளனர். சீனாவின் விளையாட்டு வீரர்கள், போட்டிக்களுக்கான தலைசிறந்த திட்டத்தை வகுத்துளளனர். ஏன், 2012 லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு அவர்கள் தயாராகியுள்ளதாகவே நம்புகின்றேன் என்றார் அவர்.