• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-08 14:59:31    
பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவுக்கான பாராட்டுகள்

cri
2008 பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, செப்டம்பர் 6ம் நாளிரவு பிரமாண்டமாக துவங்கியது. துவக்க விழாவில், கண்களுக்கு விருந்து தரும் வண்ணமிகு வான வேடிக்கை, அழகான ஒளி அமைப்பு, இனிய இசை ஆகியவற்றினால், மக்கள், ஒரே மாதிரியான தலைச்சிறந்த இரண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளைக் கண்டுகளித்துள்ளனர். அதேவேளை, துவக்க விழாவில் ஊனமுற்ற கலைஞர்கள் அரங்கேற்றிய நிகழ்ச்சிகளும், அன்பான சூழ்நிலையும், தாண்டிச் செல்வது, ஒன்றிணைவது, அனுபவிப்பது என்ற பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் கருத்துகளை நன்றாக விளக்கிக்கூறியுள்ளன.

இந்தத் துவக்க விழா மிகவும் தலைச்சிறந்ததாகவும், மகிழ்ச்சியடைவதாகவும் இருக்கிறது என்று, இந்தியப் பிரதிநிதிக்குழுத் தலைவர் சங்கர் ஐயர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பல்வேறு நாடுகளின் ஊனமுற்ற விளையாட்டு வீரர்களும் வீரங்கனைகளும் இனைந்து, தலைச்சிறந்த குதூகலக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். துவக்கி விழாவில் ஊனமுற்ற கலைஞர்கள் பலர், கலை நிகழ்ச்சிகளின் மூலம் தங்கள் திறனை வெளிப்படுத்தினர். அவர் கூறியதாவது:

பியானோ இசைத்து பார்வையற்றவர் வழங்கிய நான்கு பருவகாலங்கள் என்ற இசை, வியக்கத்தக்கதாய் அமைந்தது. குழந்தைகள் தவளை போன்று பாசாங்கு செய்து, அரங்கேற்றிய நடனம் நன்றாக இருந்தது. சிறுமி ஒருவர், சக்கர வண்டியில் உட்கார்ந்து அரங்கேற்றிய பாஃலேத் மிகவும் அருமையானது என்றார் சங்கர் ஐயர்.

உகாண்டாப் பிரதிநிதிக்குழுவின் தலைவர் கியாக்கா துவக்க விழாவைப் பார்த்தப் பிறகு மிகவும் வியப்படைந்தார். துவக்க விழாவின் நிகழ்ச்சிகள், மக்களை மனமுருகச் செய்தன. சமத்துவத்தையும் ஒன்றிணைப்பையும் இது வலியுறுத்தி, வாழ்க்கையில் ஊனமுற்றோர்களின் துணிவையும் நம்பிக்கையும் வலுப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:

பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் விளையாட்டு வீரர்களும் வீரங்கனைகளும் குழுமியுள்ள துவக்க விழா நடைபெறும் இடத்தில் வந்தடைவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தலைச்சிறந்த கலை நிகழ்ச்சிகளில் பல, ஊனமுற்றோருக்கு ஊக்கமளிப்பதோடு, அவர்களின் சுயநம்பிக்கையை அதிகரித்தன. பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், அவர்கள் போட்டியிடுவது, உலக இணக்கத்தை எடுத்துக்காட்டியுள்ளது என்றார் அவர்.

போர்த்துகீஸியப் பிரதிநிதிக்குழுத் தலைவர் காவல்கோ, துவக்க விழாவையும், சீனாவின் ஆயத்தப்பணிகளையும் வெகுவாக பாராட்டினார். இத்துவக்க விழா, கருவூலம் போன்று, எழில் மிக்க உள்ளடக்கங்களை கொண்டிருந்தது என்று அவர் தெரிவித்தார்.

துருக்கியின் தேசிய ஊனமுற்றோர் ஒலிம்பிக் குழுவின் தலைமை செயலாளர் இபுஃரஹிம் குமுஸ்தால் துவக்க விழாவை கண்டுகளித்த பிறகு பேசுகையில், சீன ஊனமுற்ற கலைஞர்கள் அரங்கேற்றிய நிகழ்ச்சிகள் தலைச்சிறந்ததாக உள்ளன. துவக்க விழாவில், மானிட அன்பு போதியளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் பாராட்டினார். அவர் கூறியதாவது:

இந்தப் பிரமாண்டமான துவக்க விழா, உயர் அறிவியல் தொழில் நுட்பத்தை பெருமளவில் பயன்படுத்தி, பல்வேறு பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகளை நன்றாக ஒன்றிணைத்து, வியப்பான சாதனையைப் பெற்றுள்ளது. கடைசியில், புனிதத் தீபத்தை ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊனமுற்ற விளையாட்டு வீரர்களின் உறுதியான கைவிடாத விளையாட்டு எழுச்சியை, இது எடுத்துக்காட்டியது என்றார் அவர்.

சீனாவின் மகெள சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் பிரதிநிதிக்குழுத் தலைவர் ஆன்றனியோ பெர்னாண்டஸ் பேசுகையில், பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சிகள் தலைசிறந்ததாக அமைந்தன என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:

நான், ஆறு முறை ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாக்களில் கலந்துகொண்டுள்ளேன். அனைத்து விளையாட்டு வீரர்களும் பிரதிநிதிகளும் அமர்ந்து, கலைநிகழ்ச்சிகளை முழுமையாக கண்டு இரசிப்பது, வரலாற்றில் இதுவே முதல்முறையாகும் என்றார் அவர்.