சீன ஊனமுற்றோர் இலட்சயம், நல வாழ்வு மீட்புதவிப் பணியிலிருந்து பன்நோக்கு சமூகப் பணியாக மாறியுள்ளது. இன்று பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் செய்தி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன ஊனமுற்றோர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் Sun Xiande இவ்வாறு தெரிவித்தார். ஊனமுற்றோர் இலட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்ற, சீனா பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஊனமுற்றோரின் வாழ்க்கை நிலை தெளிவாக மேம்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
சீன ஊனமுற்றோருக்கான 2வது கள ஆய்வு அறிக்கையின் படி, சீனாவில் ஊனமுற்றோரின் எண்ணிக்கை 8கோடிக்கு மேலாகும். முழுநாட்டிலும் மக்கள் தொகையில் இது 6விழுக்காட்டுக்கு மேல் வகிக்கிறது. சிறப்பான மக்கள் என்ற வகையில், சீன ஊனமுற்றோர் நலனுக்கான உத்தரவாதம் நாளுக்கு நாள் முழுச் சமூகத்தின் கவனத்தை பெற்று வருகின்றது. Sun Xiande எடுத்துக்கூறியதாவது:
நாடுமுழுவதிலும் இரண்டு மாதிரி ஆய்வுகளை சீனா மேற்கொண்டது. ஊனமுற்றோர் காப்பீட்டுச் சட்டம், ஊனமுற்றோர் கல்வி விதிகள், ஊனமுற்றோர் வேலை வாய்ப்பு பற்றிய விதிகள் முதலிய சட்டங்களையும் விதிகளையும் வெளியிட்டது. ஊனமுற்றோர் இலட்சயத்தின் வளர்ச்சி பற்றிய 5 தேசிய திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்துகின்றது. அரசாங்கத்தில் ஊனமுற்றோர் பணி புரியும் நிறுவனத்தை உருவாக்கியது. ஊனமுற்றோர் குணமடைதல், கல்வி, வேலை வாய்ப்பு, சமூகக் காப்பீடு முதலியவை தொடர்பான கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் வருத்தது. புதிய ஒருங்கிணைந்த ஊனமுற்றோர் அமைப்பு முறையை உருவாக்கி, விரிவான முறையில் ஊனமுற்றோருக்கான உதவி நடவடிக்கையை மேற்கொண்டு, ஊனமுற்றோர் இலட்சியத்தின் வளர்ச்சியை தூண்டுகின்றது என்றார் அவர்.
ள்ளிவிபரங்களின் படி, சீனாவின் 50க்கு அதிகமான சட்டங்கள் ஊனமுற்றோ் நலன் உரிமை பற்றிய அம்சங்களுடன் நேரடியாக தொடர்புடையவை. ஊனமுற்றோர் உடல் நல மீட்புக்கான சேவையின் அளவும் விரைவில் விரிவாக்கப்பட்டு, ஊனமுற்றோர் கல்வி பெறும் உரிமை மேலும் சிறப்புடன் உத்தரவாதம் செய்யப்பட்டது.
சீனாவில் தாமாகவே வேலை வாய்ப்பு பெறுவதை தவிர, சில ஊனமுற்றோர் சிறப்பு நலத் தொழில் நிறுவனங்களில் வேலை செய்யலாம். தவிர, தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிகளின் படி, தேசிய நிறுவனங்களும் சமூக நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவில் ஊனமுற்றோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஊனமுற்றோர் வேலை வாய்ப்புக்கான உத்தரவாத கொள்கையின் நடைமுறையாக்கத்தை சீனா வலுப்படுத்தி, ஊனமுற்றோர் தற்சார்பாக வேலை வாய்ப்பை தேர்ந்தெடுப்பதற்கும் தற்சார்பாக வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும் ஊக்கமளித்து, கிராமப்புற ஊனமுற்றோர் வேலை வாய்ப்பை பெறுவதற்கு பல்வேறு வழிமுறைகளில் உதவி செய்து வருகின்றது என்று சீனத் தேசிய மனித வள மற்றும் சமூக காப்பீட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த வேலை வாய்ப்பு வழங்குவதை முன்னேற்றத் துறையின் தலைவர் Yu Faming எடுத்துக்கூறினார். அவர் ஒரு தொகுதி எண்ணிக்கைகளை எடுத்துக்காட்டு, அவர் கூறியதாவது:
2007ம் ஆண்டு இறுதி வரை, சீன நகரங்களில் வேலை வாய்ப்பை பெற்றுள்ள ஊனமுற்றோரின் எண்ணிக்கை 43இலட்சத்து 37ஆயிரத்தை எட்டியுள்ளது. கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை பெற்றுள்ள ஊனமுற்றோரின் எண்ணிக்கை 1கோடியே 69இலட்சத்து 66ஆயிரமாகும். 2007ம் ஆண்டில் மட்டும், நகரங்களில் வேலை வாய்ப்பை பெற்றுள்ள ஊனமுற்றோரின் எண்ணிக்கை 3இலட்சத்து 92 ஆயிரத்தை அதிகரித்தது. ஆண்டுதோறும் புதிதாக அதிகரித்த ஊனமுற்றோர் அடிப்படையில் உரிய வேலை வாய்ப்பை பெற முடியும் என்றார் அவர்.
ஊனமுற்றோருக்கான காப்பீட்டு நிலைமையை மேலும் உயர்த்தும் வகையில், சீனப் பொதுத் துறை வாரியங்கள் ஊனமுற்றோருக்கான பல நல மற்றும் சமூக மீட்புதவிப் பணிகளை மேற்கொண்டன. நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் சிறப்பு நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம், உழைப்பாற்றல் இழந்தோர், ஆதாரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் ஆகியோருக்கு ஒருங்கிணைந்த கவனம் செலுத்தப்படுகிறது.
தொடர்புடைய நிறுவனங்களின் உருவாக்கத்தை வலுப்படுத்தியதோடு, ஊனமுற்றோரின் தனிச்சிறப்புக்கு இணங்க, நல நிறுவனங்கள் மற்றும் பணிகளில் ஊனமுற்றோரின் உடல் நல மீட்பு சேவையின் கட்டுமானத்தை சீனப் பொதுத் துறை வாரியங்கள் வலுப்படுத்தின. கடந்த 4 ஆண்டுகளில், நல வாழ்வு குலுக்கல் சீட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் ஏற்பட்ட 80கோடி யுவான் மதிப்பு சமூகப் பொது நல நிதியத்தை பயன்படுத்தி, சுமார் 40 ஆயிரத்து ஊனமுற்ற அனாதைக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தவிர, இவ்வாண்டில் சீன அரசு 60 கோடி யுவான் நிதியை ஒதுக்கீடு செய்து, ஊனமுற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளை உருவாக்கும். இனி, சீன அரசு தொடர்புடைய ஒதுக்கீட்டை தொடர்ந்து அதிகரித்து, ஊனமுற்றோர் கல்வி பெறும் விகிதத்தை உயர்த்தும் என்று சீன ஊனமுற்றோர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் Sun Xiande கூறினார்.
|