• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-09 18:27:08    
சீனாவி்ல் புகை பிடிப்பதைத் தடுக்கும் பணி

cri
புகைபிடிப்பதன் கெடுதல் பற்றி அனைவருக்கும் தெரியும். சீனாவில் ஆண்டுதோறும் சுமார் 10 இலட்சம் பேர் புகை பிடிப்பதால் ஏற்படும் பல்வகை நோய்களால் மரணமடைகின்றனர். புகைபிடிப்பை கைவிடுப்பதற்குத் துணை புரியும் சமூக சூழ்நிலையை உருவாக்கும் வகையில், அண்மையில் பெய்ஜிங் மாநகராட்சி ஒரு விதியை வெளியிட்டது. உணவு விடுதி, உணவகம், உடல் பயிற்சி மையம் உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடிப்பு விடுமுறை பொழுது போக்கு இடங்கள், முதன்முறையாக தடுக்கப்பட்டது என்று இவ்விதியில் கோரப்படுகின்றது.

எனது கணவர் புகை பிடிக்கின்றார். நான் அதை விரும்பவில்லை. ஆனால், என்னால் அவரைத் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. ஆகையால், அவர் புகை பிடித்ததுடன், நான் வெளியே சென்று விடுவேன். அல்லது ஜன்னல்களைத் திறப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று sun xiao ya என்னும் பெண்மணி கூறினார்.

அவருடைய கணவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக புகை பிடித்துள்ளார். புகைபிடிப்பது அவருடைய அன்றைட வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறியுள்ளது. மேலும் புகைபிடிப்பதற்காக அவர் பல சாக்குபோக்குகளைத் தெரிவிக்கின்றார். அவர் கூறியதாவது

மிகழ்ச்சி அடைகின்ற போதும், ஏமாற்றம் அடைகின்ற போதும், நண்பர்கள் கூடுகின்ற போதும், விருந்து அளிக்கப்படும், புகை பிடிக்க விரும்புகின்றேன் என்றார் அவருடைய கணவர்.

அண்மையில், பொது மக்களின் கருத்துக்களைக் கேட்டறிய, பெய்ஜிங் மாநகரின் பொது இடங்களி்ல் புகை பிடிப்பு தடுப்பு பற்றிய புதிய விதிகள் பெய்ஜிங் மாநகராட்சியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன. இவற்றின் படி, முன்பை விட மேலும் அதிகமான பொது இடங்கள் புகை பிடிப்பு தடுப்பு நடவடிக்கையில் சேர்க்கப்பட்டன. இந்த இடங்களில் தடை விதியை புறக்கணித்து புகை பிடிக்கின்றவர்கள் 50 யுவானுக்குட்பட்ட அபராதம் விதிக்கப்படுவர்.

இந்த விதிகள் மே திங்களின் இறுதியில் நடைமுறைக்கு வரும் என்று அறிய வருகின்றது.

இப்புதிய விதிகள் மிகப்பல நகரவாசிகளின் கவனத்தை ஈர்த்து, அவர்களின் ஆதரவை பெற்றுள்ளன. புகை பிடிப்பு தடை விதிப்பது, உடல் நலனுக்கு துணை புரிவது மட்டுமல்ல, நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கும் சீரான சமூக சூழலை உருவாக்கலாம் என்று மக்கள் கருதுகின்றனர். Sun xiao ya அம்மையார் இது பற்றி கூறியதாவது

இந்த விதிகளை மிகவும் ஆதரிக்கின்றேன். பொது இடங்களிலும், வீட்டிலும், புகை பிடிப்பது தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் பாதிக்கும். தன்னையும் பிறரையும் பாதிக்கின்ற இந்த பழக்கத்தை அகற்ற வேண்டும் என்றார் அவர்.

கை பிடிக்கும் போது வெளிவரும் புகையில், புற்று நோயை உண்டாக்கும் 40க்கும் மேலான பொருட்கள் உள்ளன. தவிரவும் புற்று நோயைத் தீவிரப்படுத்தும் 10க்கும் அதிகமான பொருட்களும் இதில் உள்ளன. ஒரு சிகரெட்டில் அடங்கியுள்ள நிக்கோட்டின் அளவு ஒரு சிறிய எலியைக் கொல்லலாம். மேலும், புகை பிடிப்பவரின் பக்கத்தில் இருப்பவர்களுக்கும். அதனால் தீமை ஏற்படும் அளவு மதிப்பீடு செய்வதை விட அதிகம்.

1 2