• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-09 18:27:08    
சீனாவி்ல் புகை பிடிப்பதைத் தடுக்கும் பணி

cri

Yu hong xia அம்மையார் சீன-ஜப்பானிய நட்புறவு மருத்துவமனையில் மூச்சுக் குழாய் பிரிவைச் சேர்ந்த புகை பிடிப்பதை தடுக்கும் துறை நிபுணராவார். சீனாவில், ஆண்டுதோறும் ஒரு இலட்சம் மக்கள் பிறர் புகை பிடிப்பதால் உருவாகும் புகையை சுவாசித்து மரணமடைகின்றனர். அவர்களில் மகளிரும் குழந்தைகளும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாவர் என்று அவர் கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது

பிறர் புகை பிடிக்கும் போது, வெளிவரும் புகையை சுவாசிப்பதை குழந்தைகள் சுய விருப்பத்தின் படி கட்டுப்படுத்த முடியாது. அவர்களுடைய நுரையீரலும், மூச்சுக் குழாய் தொடர்பான உடல் பகுதிகளும் எளிதாக நோய்வாய்படும். பெண்களும் பிறர் புகை பிடிக்கும் மக்களை விட நுரையீரல் புற்று நோய்களால் அல்லல்படும் விகிதம் அதிகம் என்றார் அவர்.

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின் படி, தற்போது, உலகில் 130 கோடி மக்கள் புகை பிடிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 50 இலட்சம் பேர் புகை பிடிப்பதுடன் தொடர்புடைய நோய்களால் உயிர் இழகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால், 2020ம் ஆண்டு, இவ்வெண்ணிக்கை 90 இலட்சமாக மாறிவிடும் என்று 2002ம் ஆண்டுக்கான உலக சுகாதார அறிக்கை சுட்டிக்காட்டியது.

2006ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் புகையிலைக் கட்டுப்பாட்டு பொது ஒப்பந்தத்தில் சீனா சேர்ந்தது. இவ்வொப்பந்தத்தின் நடைமுறையாக்கத்தையும் புகைபிடிப்பு கட்டுபாட்டு வலைப்பின்னல் கட்டுமானத்தையும் வலுப்படுத்துவது, இவ்வாண்டு புகைபிடிப்பு கட்டுப்பாட்டு துறையில் சீன அரசு மேற்கொள்ளும் முக்கிய பணிகளில் ஒன்றாகும். சீனத் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தீராத நோய் கட்டுபாட்டு பிரிவின் புகை பிடிப்புத் தடுப்பு அலுவலகத்தின் துணைத் தலைவர் jiang heng அம்மையார் கூறியதாவது

அரசின் நிலையில், ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்பு முறை உருவாக்கப்பட்டது. 8 அமைச்சகங்கள் இதில் சேர்க்கப்பட்டன. புகை பிடிப்பு கட்டுபாட்டுடன் தொடர்புடைய பல சட்ட விதிகள் வகுக்கப்பட்டு வருகின்றன. பொது சுகாதார நிர்வாக விதிகள், புகை பிடிப்பு பற்றிய விளம்பரங்கள் முதலியவை இவற்றில் அடங்கும். 2 ஆண்டுகளுக்கு முன், புகை பிடிப்பு கட்டுப்பாட்டு வலைப்பின்னலின் கட்டுமானத்திற்கு அரசு சிறப்பு நிதி தொகை ஒதுக்கியுள்ளது என்றார் அவர்.

புகை பிடிப்பு பரவல் மற்றும் புகை பிடிப்பு கட்டுப்பாட்டுடன் தொடர்புடைய தகவல்களைச் சேகரிக்க இவ்வாண்டு சீனாவின் 31 மாநிலங்கள், தன்னாட்சி பிரதேசங்கள் மற்றும் மாநகரங்களில் முக்கியமாக மக்களிடையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். பல்வகை புகை பிடிப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, முழு சமூகத்தில் புகை பிடிப்பு பழக்கத்தின் கட்டுப்பாட்டை ஆதரிக்கும் சூழ்நிலை உருவாக்கப்படும்.

புதிய விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு, பொது இடங்களில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை குறைந்துவிடும். அதன் விளையவாக, பெய்ஜிங் மாநகரில் புகை பிடிப்போரின் எண்ணிக்கையும் குறையும் என்று jiang heng அம்மையார் கருதுகின்றார்.

பெய்ஜிங் மாநகரை தவிர, சீனாவி்ல் வேறு பல நகரங்களிலும் புகை பிடிப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிய வருகின்றது.


1 2